Monday, 15 December 2014

இப்படியும் நம்பிக்கையா !?!?


நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த மாதிரியான மூட இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு மக்களிடையேயும் கூட சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

 ஜப்பான்

ஜப்பான் நாட்டு மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. பாம்புக்கறியை கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல் என்பது மிகவும் புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்ஸிலும், வீட்டில் பணம் வைக்கும் பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானிய மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.

கொரியா

நம்மவர்கள் முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அப்செட் ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.  

பிரேசில்

பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும் கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள். காபியோ அல்லது டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும் என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா பணமும் நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும்  அங்கே காலம் காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால் அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.

மெக்ஸிகோ

நம்ம ஊரில் நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில் முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் எல்லாருடைய முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

முன்னோர்கள் உபயோகித்த மூலிகைச் சாறுகள்

சில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்தினால் எண்ணற்ற தோல் வியாதிகளை குணப்படுத்தலாம். நம் முன்னோர்கள் நோயின் தாக்கம் இன்றி வாழ அவ்வப்போது வீடுகளில் மூலிகைச் சாறு கொடுப்பார்கள். இது இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த மூலிகைச் சாறுகளின் மருத்துவப் பயன்களை அன்றே உணர்ந்த முன்னோர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக பாடியுள்ளனர்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

இஞ்சி சாறு

நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.

இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணிச் சாறு

கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொன்னாங்கண்ணிச் சாறு

பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

தூதுவளைச் சாறு

வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறு

அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு

தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.
 
பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வெள்ளைப் பூண்டு சாறு

வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.

வெற்றிலைச் சாறு

வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு

சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.

Wednesday, 10 December 2014

தமிழ்நாடு பற்றிய அறி(யா/ந்)த சிறு தகவல்கள்



1.தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்தூஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

பொது அறிவு தகவல்கள்

காதல் காட்சியே இல்லாமல் நாடகங்கள் எழுதியவர் பெர்னாட்ஷா.

மஞ்சள் காமாலை நோயால் இறந்தவர்கள் கண்களைத் தானம் செய்ய முடியாது.

வேர்க்கடலையிலிருந்து எண்ணெய் தவிர பால், தயிர், மாவு, வெண்ணெய் தயாரிக்கலாம்.

செவாலியர் விருதை உருவாக்கியவர் நெப்போலியன் போனபார்ட்.

உலகிலேயே முதன் முதலில் வெளிவந்த மாலை நாளிதழ் “தி ஸ்டார்’, இடம்: லண்டன்.

பௌத்தர்களின் ஆண்டுக் கணக்கு கி.மு.543 வைசாக பௌர்ணமியிலிருந்து துவங்குகிறது.

என்றுமே கெட்டுப் போகாத உணவு தேன்.

முதலைகளால் நாக்கை வெளியே நீட்ட முடியாது.

பைபிளில் இடம் பெறாத ஒரு பிராணி பூனை

பூனைகள் இனிப்பைத் தொடாது.

பூனையால் புவியின் காந்தப் புலனை உணர முடியும்.

ஆமைக்குப் பற்கள் கிடையாது

முதலையின் மேல் தாடையில் 40 பற்களும், கீழ்தாடையில்
30 பற்களும் உண்டு

பெண் குதிரைக்கு 40 பற்களும், ஆண் குதிரைக்கு 36 பற்களும் உண்டு.

பச்சையம் இல்லாத தாவரம் காளான்

நீரில் நீந்திக்கொண்டே உறங்கும் உயிரினம் – வாத்து

50 அடிக்கு மேல் வளரும் புல் இன தாவரம் – மூங்கில்

யானையைப்போன்ற தந்தம் உள்ள உயினம் – வாலரஸ்

நின்று கொண்டே உறங்கும் விலங்கு – குதிரை

சிலந்தி வகைகிளில் அதிக விஷமுள்ளது – தி பிளாக் விடோ

Tuesday, 9 December 2014

திருநெல்வேலி அல்வா வரலாறு...!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே திருநெல்வேலி என்றாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.

வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். தாமிரபரணித் தண்ணீரின் சேர்க்கையால் அந்த அல்வா அவர்களின் ஊரில் செய்த அல்வாவை விட மிகவும் ருசியாக இருந்திருக்கிறது.இந்த சுவையான திண்பண்டத்தை இந்த ஊரிலேயே தயாரித்து விற்பனை செய்தால் என்னவென்று அல்வாக் கடையைத் துவங்கி இருக்கிறார்கள் அன்றிலிருந்து அல்வா திருநெல்வேலியில் ஒன்றாகி விட்டது என மற்றும் சிலர் சொல்கிறார்கள்.

எது எப்படியோ இன்று திருநெல்வேலி என்றாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அல்வா ஞாபகத்திற்கு வந்து விடுகிறது. இந்த ஊரு அல்வாவிற்கு இருக்கும் சுவையே தனிதான். திருநெல்வேலி முழுக்க அல்வாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலின் எதிரே இருக்கும் "இருட்டுக்கடை" அல்வாவிற்குத்தான் முதலிடம்.

இந்த இருட்டுக் கடையில் அல்வா மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 82 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர்.

கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது.

இங்கு அல்வாவை 100 கிராம், 200 கிராம் என்கிற அளவுகளில் சுடச்சுட இலையில் வைத்து விற்பனை செய்கிறார்கள். இவ்வூர் மக்கள் இதை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். கிலோக் கணக்கிலும் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

திருநெல்வேலியிலும் இதைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள், வெளியூர்களில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது இந்த இருட்டுக் கடையில்தான் அல்வாவை வாங்கிச் செல்கின்றனர். வெளியூரிலிருந்து வருபவர்கள் திருநெல்வேலிக்கு வரும் போது இருட்டுக் கடை குறித்து தெரியாததாலும், இந்தக் கடை அல்வாவிற்காக இரவு வரை காத்துக் கிடக்க விரும்பாமலும் வேறு கடைகளில் வாங்கிச் செல்கின்றனர். இப்படி வாங்கிச் செல்லும் கடைகளில் திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தின் அருகிலிருக்கும் சாந்தி ஸ்வீட்ஸ், லெட்சுமி விலாஸ் கடைகளில் இருக்கும் அல்வாக்கள் சுவையாக இருக்கிறது. மற்ற லாலாக் கடைகளிலும் அல்வா ஓரளவு சுவையாக கிடைக்கிறது. தரம் குறைந்த அல்வாவும் பல போலிக் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

சுத்தமான சம்பாக் கோதுமையில் நெய், சர்க்கரை, பால் மட்டும் சேர்த்துச் செய்யப்படும் அல்வா மிகச் சுவையாக கிடைக்கிறது. ஆனால் பல போலியான அல்வா கடைகளில் தரமில்லாத கோதுமையில் அல்லது ஜவ்வரிசி மற்றும் பிற மாவுப் பொருட்களையும் கலந்து தயாரிக்கப் படுகின்றன. இது போன்ற கலப்புப் பொருள்களால் தயாரிக்கப்படும் அல்வா சுவையாக இருப்பதில்லை.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை வடிவினை காண்போம்.

சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் பயன்படுத்தினார்கள். அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

அந்தபுல்லு கற்பூரபுல்லு, கோரைப்புல்லு என இரு வகைப்படும். கோரைபுல்லுக்கு கழு என்று வேறு ஒருபெயர் உண்டு.

கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும். கற்பூர பாயின் விலை அதிகம் பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.

கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும். இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும்.

இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை" என்ற பழமொழி வந்தது .

கழு என்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க, கழுதைக்க' என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.

அதன்உண்மையான அர்த்தம் "கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.

அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆகி விட்டது.

ஒரு வரி மருத்துவம்

1.என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.

3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை.

6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.

7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).

8.மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.

9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.

10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.

11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.

15.ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்
.
16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.

18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.

19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.

20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.

21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.

22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.

23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.

24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.

25.சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.

26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.

27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.

28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.

29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.

30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை).

31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.

32.முகம் அழகுபெற திராட்சை பழம்.

33.அஜீரணத்தை போக்கும் புதினா.

34.“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.

35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.

36.மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”.

37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.

39.முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி.