Friday, 27 June 2014

அதிசயத்தக்க மனித உடல் ...!!!


நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடதுகால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.

மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்கள் வரை செயல்படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது.

50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இதுதவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்றுமுன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.

பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும் போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.

நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்.

மண்டை ஓடு மனினதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.

மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.

பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிறவேறுபாடே தெரியாது.

Thursday, 26 June 2014

ஏ.டி.எம் உருவான கதை தெரியுமா?

இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம் (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரசியமானது.

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம் சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.

அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினாலும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.

அதன் விளைவுதான் முதல் ஏ.டி.எம். உருவாக வித்திட்டது. 1969'இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.டி.எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.டி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number) ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.

உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார். ஏ.டி.எம். தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோன் தனது மனைவியின் மீது கொண்ட காதல்தான்...!!!

Wednesday, 25 June 2014

வீட்டில் மஹாபாரதம் படித்தால் வீட்டிற்கு ஆகாது என்பது ஏன்?

ஏன் என்று தெரியாமலே சில பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளுதல் முந்தைய தலைமுறையோடு அழிந்துவிட்டது . இப்பொழுதெல்லாம் பகுத்து அறிவதனால் சில மூட நம்பிக்கைகளை தூக்கி எறிந்து தேவையானவற்றை எடுத்து கொள்கிறோம் . 

"வீட்டில் மஹாபாரதம் படித்தால் வீட்டிற்கு ஆகாது' என்ற கூறுவதுண்டு.  அறம் வளர்க்கும் நல்ல பிராமணனுக்கு பசு தானம் செய்வதை விட, மஹாபாரதம் படித்தல் புண்ய காரியம் என்கிறது பாரதம். இத்தனை விளக்கங்கள் வியாக்கியானங்கள் தாண்டியும் பலரும் பாரதத்தை வீட்டில் படிப்பதில்லை.

ராமாயணம் புனித நூல் என்றால் மஹாபாராதம் ஏன் வீட்டிற்கு ஆகாது? கிருஷ்ணின் கீதோபதேசம் படம் மனையில் இருத்தல் சுபீக்ஷம் என்றால், ஏன் மஹாபாரதம் படித்தல் உகந்ததாக கருதப்படவில்லை? 

எந்த ஒரு செயலுக்கும் சம்பிரதாயத்திற்கும் மனையிலும், சுற்றுப்புறத்திலும், நல்லிணக்கமும், நல்லெண்ணம், பரிவு, தயை, நன்னடத்தை முதலியன புகட்டுவதே நோக்கமாக இருக்கும். இராமாயணத்தில் பக்தி, பொறுமை, தயை, ஒழுக்கம் முதலியன அதிகம் காணப்படுவதால் அதனைப் மிகப் புனித நூலாக போற்றுகிறார்கள்.

மஹாபாரதக் கதைகள் த்ரேதாயுகத்தின் முடிவில் நடை பெற்றதால், தர்மத்திற்கு புறம்பான கதைகள் நிறையவே நடைபெற்றுள்ளன. சூதாட்டமும், மனையாளை பணயமாக வைத்து சூதாடுவதும், பல கதாபாத்திரங்களின் குணங்களும், நடத்தையும், பொதுவாக மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கும்படியாய் அமையவில்லை என்றும் , ஜெயிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டதால் சில நேரங்களில் யுத்த நீதிகளும் கூட மீறப்பட்டிருக்கிறது என்றும் , இதனை  படிக்கும் சாமான்யன் மனதில் குழப்பமும், நேர்மைக்கு புறம்பான கதைகளும் மனதில் பதியுமே அல்லாது தர்ம நியாயங்கள் முரண்பட்டு நிற்பதால் அவனுக்கு நன்மை அதிகம் விளையும் வாய்ப்பில்லை என்று கருதி நம் முன்னோர்கள் வீட்டில் , வீட்டில் மகாபாரதம் படிக்க கூடாது என்று கூறி வைத்தனர் . 

இக்கால சந்ததியினர் பலரும் வீட்டில் மஹாபாராத கதைகளை விரும்பி படிக்கின்றனர் . இக்கால சந்ததியினரின் பகுத்தறிவிற்கு இதுவும் ஒரு சான்றாகும் . ஒரு மனிதன் எப்படி  இருக்க கூடாது என்பதனைவிட , எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதனை மஹாபாராதம் மூலம் பகுதறியலாம் என்பதற்கு இக்கால தலைமுறையினரே சிறந்த சான்று .

Tuesday, 24 June 2014

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது ஏன்?

திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்
மேல்கீழாய் இருந்தாலும், அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்ற கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும்  தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்?

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம் .அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு?அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

அ-உயிரெழுத்து....
ம்-மெய்யெழுத்து .
மா-உயிர் மெய்யெழுத்து.
அதே போல தான் அப்பா.
தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண்,காது,உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

எந்த மொழியிலும் அப்பா,அப்பாவிற்கு  இந்த அர்த்தங்கள் கிடையாது.நமது தமிழ் மொழியில்  இத்துனை அற்புதங்கள் உள்ளன.

கிராமத்து மூட நம்பிக்கைகள் ...!!!

பெண் உடலின் இயற்கையான நிகழ்வான மாதவிலக்கிற்கு  எத்தனை பெயர்கள். அதை வைத்துத்தான் எத்தனை மூட நம்பிக்கைகள்.

இச்சமயத்தில்  பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும் இப்படி பல தேவையற்ற  பேச்சுக்கள்.

கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். பேய் அடித்துவிடுமாம்! 

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல.

நம் முன்னோர்கள் காரணமின்றி எதுவும் செய்யமாட்டார்கள் . மாதவிலக்கின் போது பெண்களை ஒதுக்கி வைக்க காரணம் அவர்களுக்கு ஓய்வு தர வேண்டும் என்பதற்காகவும் , அவர்கள் பளு தூக்குவதால்  (தண்ணீர் குடம் போன்றவை ) வலி ,மாதவிலக்கு  சுழற்சிகளில் மாறுதல்கள் , அதிக போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .

இக்கால நவநாகரிக பெண்கள் தங்கள் உடல் மாற்றங்களில் , தனிப்பட்ட வாழ்வினிலும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் . இதனை முன்னரே அறிந்த நம் முன்னோர் , அக்காலத்திலேயே இதனை நடைமுறை படுத்தி உள்ளனர் .

இன்றும் பல கிராமங்களில் இத்தகைய  மூட வழக்கங்கள் இருந்து வருகின்றது .  இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் இருந்து தெளிவுற வைக்கவே இத்தகைய பதிப்பு .

நற்குணங்கள் ...!!!

 ஏழ்மையிலும் நேர்மை

 தோல்வியிலும் விடாமுயற்சி

 கோபத்திலும் பொறுமை

 துன்பத்திலும் மனபலம்

 பதவியிலும் பணிவு

 செல்வத்திலும் எளிமை

Monday, 23 June 2014

நிறம் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க...!!!


நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை, ப்ளூ, சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..

அந்த நிறங்களின் அர்த்தம் ,

பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .

இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்க.

Saturday, 21 June 2014

பயனுள்ள தகவல்கள் !!!


ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.

ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.

நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்? நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.

திருப்புமுனை !!!

ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது "வயிற்று வலி நோயாளி" வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

"டாக்டர்" என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார்.

நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., "நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்' என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.

ஒப்பனை செய்து மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.

அவரது வாழ்வில் பெரிய திரையில் நுழைய பெரும் உதவியாக இருந்தது அவரது சாமர்த்தியமான நடிப்பு.

அவரது தேர்ந்த நடிப்பு பிற்காலத்தில் நகைச்சுவையில் முடிசூடா மன்னராக திகலவைத்து . 

வாய்புகள் வாயில் கதவினை தட்டும் பொழுது அதனை சிறப்பாக பயன்படுத்திகொள்ளவேண்டும் என்பதற்கு நாகேஷ் அவர்கள் ஓர் எடுத்துகாட்டு .

தெரியுமா செய்தி ?

அமெரிக்காவில் திருமணமான 8 ஜோடிகளில் ஒரு ஜோடி, இணையம் வழியாக சந்தித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பர்.

சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கம்ப்யூட்டரில் இயங்கும்போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சோதித்துப் பாருங்களேன்.

மரங்கொத்திப் பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தும்.

மின்னல் தாக்கிய விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது

மின்னலில் இருந்து வரும் நைட்ரஜன் உரசத்து செடி,கொடிகள் வளருவதற்கு பயன்படுகிறது.
  
செருப்பு கடையில் பாதத்தின் நீளத்தை அளக்கும் கருவியின் பெயர் "பிரான்னாக்'.

 

அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை !!!

ஒருமுறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்ற காரில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார். இதைக் கண்ட
ஓட்டுநர் டாம் மிகுந்த அக்கறையுடன் "அய்யா,இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே?" என்று கேட்டார்.

"அது இயலாது டாம். அரங்கில் ஏகப்பட்ட பேர் காத்துக்கொண்டிருப்பார்கள் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை" என்றார்.

இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை. ஒரு யோசனை சொன்னார் " அய்யா, ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே?
உங்கள் உரைகளை நிறைய கேட்டிருக்கிறேன். இன்று உங்களுக்கு பதிலாக, உங்களுடைய இடத்தில் நான் இருந்து உரையாற்றுகிறேனே?"

ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது. 

ஓட்டுநரின் தொப்பியை அணிந்துகொண்டு கடைசி இருக்கையில் அமர்ந்துகொள்ள,ஒட்டுநர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார். 

கூட்டத்தினருக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார் என்று தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன்  என்று நம்பினர்.
இருந்தாலும் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு பேராசிரியர் வடிவில் கிளம்பியது. 

அவர் ஒரு விசயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட கேள்வியாக கேட்டு விளக்கமளிக்க வேண்டினார். திக்கு முக்காடிய ஓட்டுநர் டாம் சட்டென சுதாரித்து சொன்னார்.

" இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே. இதற்கான விளக்கத்தை கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே கூட அளிக்க முடியும்!" என்றார் சாமர்த்தியமாக.

மனதிற்குள் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்து கொண்டே ஐன்ஸ்டீன் எழுந்து சென்றார் விளக்கமளிக்க.

Friday, 20 June 2014

உங்களுக்கு தெரியுமா ?

குழந்தைகள் பிறந்த 6 மாதம் வரை ஒரே முறையில் மூச்சு விடவும் , விழுங்கவும் முடியுமாம்.

புதியதாய் பேனா எழுத கொடுத்தால் 97% மக்கள் தனது பெயரை எழுதுகின்றனர் .

மனிதனின் கண் 200 டிகிரி வரை திரும்பும் ஆற்றல் பெற்றது .

நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் கியாஸ்ஸுக்கு எவ்வித மணமும் கிடையாது. எதிர்பாரா விதமாக சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக நாற்றம் கொடிக்கக்கூடிய ஒரு வேதிப்பொருளை அதனுடன் கலக்கிறார்கள்.

எவ்வளவு பெரிய காகிதமே ஆனாலும் அதை ஏழு தடவைக்கு மேல் மடிக்க முடியாது .

கனடா நாட்டவர் தங்களின் புகைப்படங்களை ஸ்டாம்பாக பயன்படுத்த முடியும் .

யானைக்குட்டிகளுக்கு அதன் தாய் மட்டுமே பால் கொடுப்பதில்லை. பாலுள்ள எல்லாப் பெண் யானைகளுமே பால் கொடுக்கும்.
 
காட்டு யானை எந்த மிருகத்தையாவது, மனிதனையாவது அடித்துக் கொன்றுவிட்டால், உடனே ஆற்றுக்கோ, குளத்துக்கோ போய், குளித்த பின்புதான் உணவு உட்கொள்ளும்.

"கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே" என்பதன் உண்மையான அர்த்தம் என்ன ?

"கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி" என்று அடிக்கடி  பலர் கூற கேட்டிருப்போம்.
 
அவ்வாறு கூறுவதன் உண்மை பொருள் தமிழ் மொழி , தமிழ்நாட்டு மக்களின் தொன்மையை குறிப்பதற்கே. 

"(கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய" முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்பதன் அர்த்தமாகும்.

பலர் கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக பொருள் கொள்கின்றனர் .

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதன் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஆதலால் கல் என்றால் கற்களை , மன் என்றால் மண்ணை குறிப்பதன்று இப்பழமொழி.

அன்னதானம், விருந்து எதற்காக கடைபிடிக்கப்பட்டது, கடைபிடிக்கப்படுகிறது ?

நீண்ட வரிசையில்  சாப்பாடிற்காக காத்திருக்கும் மக்கள் , சாப்பிட  தட்டு  அல்லது இலை வாங்குவதற்கு அடி-தடி , ஒருவருக்கு அதிகமாய் மற்றவருக்கு சிறிதளவு குறைவாக சாப்பாடு கொடுக்கப்பட்டால் சண்டை .

அன்னதானம் வழங்கும் இடத்தில தவறாமல் நடக்கும் நிகழ்வுகள் இவை .

அன்னதானம் வழங்கப்படுவதன் நோக்கம் உயிரினங்களின் பசியினை ஆற்றுவதற்க்கே. நம் முன்னோர் காலத்தில் பேருந்து வசதிகள் கிடையாது . வெளியூரில் இருந்து கோவில் விசேஷங்கள் , சுபதினங்களுக்கு நடைபயணமாக அல்லது மாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் வருவது வழக்கம் .

அவ்வாறு நடைபயணமாக வரும் மக்கள், அவர் அவர் வீட்டிலேயே "கட்டுச்சோறு" கட்டி எடுத்து வருவர் . வரும் வழிகளில் மர நிழல்களில் அமர்ந்து உடன் வருபவர்களுடன் பகிர்ந்து உண்பர் .

அவர்கள் கொண்டுவரும் கட்டுச்சோறு ஓர்-இரு நாட்களில் கெட்டுவிடும் . நீண்ட தூரம் இவ்வாறு பயணம் மேற்கொள்ளும்போது சில நாட்கள் உணவு இன்றியே கோவிலை வந்தடைவர் .

அவ்வாறு களைப்பில் வரும் பக்தர்களை பசியாற்றவே கோவிலில் அன்னதானம் முறை கொண்டுவரப்பட்டது .

அதேபோல , ஆண்டு முழுவதும்  ஓர்-இரு வேளை  மட்டுமே கூழ், கஞ்சி என அருந்திவிட்டு , நாள் முழுவதும் வயல் காடுகளில் பாடுபடும் மக்கள் ஒருநாளாவது இறைச்சி உன்னச்செய்ய வேண்டும் என்பதே கெடா விருந்து நடத்துவதன் நோக்கம் .

இக்கால மக்கள்,, வீட்டில் தாங்கள் சமைத்த உணவினை நன்றாக உண்டுவிட்டு அன்னதானம் உண்ணுவது , பகட்டிற்காக  விருந்து நடத்துவது போன்ற அவலங்கள், விருந்துகளின் மூலமாக நம் முன்னோர்கள் காட்டிய   மனித நேயத்தை கொன்றுகொண்டு வருகிறது என்பது வருந்தத்தக்க ஒன்றாகும் .

Thursday, 19 June 2014

அறிவார்ந்த பழமொழிகள் - உண்மை அர்த்தங்கள் ...!!!

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

உண்டி என்பது சாப்பாடு. பெண்கள் உணவு முறையில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதன் பொருளாகும் . அதாவது , அளவாக சாப்பிடுதல் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் உணவினை வீண் செய்ய கூடாது என்பதற்காக கூறப்பட்ட பழமொழியாகும் .

சேலை கட்டிய மாதரை நம்பாதே

சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள். 

துணை போனாலும் பிணை போகாதே

ஒருவருக்கு துணையாக அவரை ஊக்குவிக்கலாமே தவிர, அவருக்கு பதிலாக நாம் எதையும் செய்யக் கூடாது. உதாரணத்திற்கு, சிலர் தங்கள் நண்பன் வாங்கிய கடனுக்காக பொறுப்பு கையெழுத்துப் போட்டுவிட்டு நண்பன் அந்த கடனைத் திருப்பி செலுத்தமுடியவில்லையென்றால், தாங்களே அதனை அடைக்கும் சூழ்நிலைக்கு வந்து அல்லல் படுவதைப் பார்த்திருக்கிறோம்.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு

வேலை செய்தால்தான் களைப்பு வரவேண்டும் என்று அவசியமில்லை. நல்ல வயிறு முட்ட சாப்பிட்டால் கூட மயக்கம் மற்றும் களைப்பு வரும். சாப்பாடு விஷயத்தில் தலைவர் சீடர் என்ற பிரிவில்லை. எல்லாருக்கும் உண்ட களைப்பு இருக்கத்தான் செய்யும்.

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பதன் உண்மையான பொருள்

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பதல்ல இந்த பழமொழி .

"போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதே இதன் உண்மையான பொருளாகும் .

உலக நடத்தை அதன் போக்கு , ஊர் நடத்தை தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை, நல் வாக்கு ,தனக்கு தெரிந்ததை மற்றவர் புரியும்படி உரைக்கும் வாக்கு உடையவனுக்கு வாத்தியார் வேலை என்பதே இதன் பொருளாகும்.

ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் - விளக்கம்

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல இந்த பழமொழி. 

"ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்" என்பதாகும்.

நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அவர்களை அழைக்காமல் இருப்போம். 

அவ்வாறு அவர்களை விட்டுவிடாமல் "ஆயிரம் முறை போய் சொல்லியாவது" அவர்களை அழைத்து நம் வீட்டில் சுபகாரியம்  நடத்த வேண்டும் என்பதாகும். 

யாருடனும் பகை கொள்ளகூடாது என்ற நல்ல நோக்கத்திற்காக,  சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி இப்போது உள்ளது போல ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று ஆகி விட்டது.

Wednesday, 18 June 2014

நம் முன்னோர் கூறிய அறிவார்ந்த பழமொழிகள்

செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

எதிரிக்கு சகுனத்தடை என்று மூக்கையா அறுத்துக் கொள்வது?

எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
 
காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
 
கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
 
எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல
 
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல
 
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
 
சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?

கணவன் உண்ட அதே இலையிலோ,தட்டிலோ மனைவி உண்ண காரணம்?

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.

குளிக்க பயன்படுத்துற சோப்பு இப்படிதான் இருக்கனுமாம்

குளிக்க சோப்பு வாங்குறப்ப  கொஞ்சம் அந்த சோப்பு அட்டைல எங்காவது ஒரு ஓரத்துல கண்ணுக்கே தெரியாத மாதுரி டி.எப்.எம்(T.F.M) 64% இல்லைனா 79% இப்படி இருக்கும்.

நாம பயன்படுத்துற சோப்போட தரத்த இப்படி தான் அறிவியல் முறையில சொல்லுவாங்களாம்.  டி.எப்.எம் (TOTAL FATTY MATTER) என்பது ஒரு சோப்புக்குள்ள இருக்குற கொழுப்பு மற்றும் ரசாயன பொருட்கள் விகிதம். 

எப்பவுமே ஒரு சோப்புல கொழுப்பு (இதுவும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத ரசாயன கலவை தாங்க) விகிதம் தான் அதிகமா இருக்கனுமாம்.

இந்த டி.எப் .எம் அளவு 80% இருந்தா அந்த சோப்பு உடம்புக்கு ஏற்றதாம் , அதிக அளவில் ரசாயன பொருட்கள் சேர்க்காம உடல் சுத்தம் செய்ய தேவையான அமிலங்கள் மட்டும் தான் கலந்திருபாங்களாம்.

இதுனால நம்ம உடம்புக்கு எந்த பக்க-விளைவுகளும் வராதாம் . உடம்புல எதாவது அலர்ஜி இல்ல எதாவது சரும பாதிப்பு இருக்குறவங்க டி.எப்.எம் 60-70% இருக்குற சோப்பு பயன்படுத்தலாம் .

இதுனாலதான் பெரும்பாலான மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததுக்கு அப்புறம் "டெட்டால்" மாதுரி சோப்பு போட்டு கை கழுவுறாங்க. டெட்டால் சோப்புல டி.எப்.எம் 64% இருக்கு. அதாவது கொழுப்பு விகிதம் 64% மற்றதெல்லாம் அமிலங்கள்.

என்னதான் அறிவியல் இவ்ளோ உண்மைய சொன்னாலும் , சோப்பு பயன்படுத்துறது ஒருத்தறோட தனிப்பட்ட விருப்பம் தான் .

இனிமேல் சோப்பு வாங்குறப்ப டி.எப்.எம் அளவு பார்க்க மறந்திறாதிங்க நண்பர்களே...!!!

Thursday, 12 June 2014

காலில் விழுந்து வணங்குவது ஏன்?

மார்கண்டேயனின் மரணத்தை முன் கூட்டியே அறிந்துகொண்ட அவர் தந்தை, வயதான சான்றோர் அனைவரின் காலிலும் விழச்செய்தார்.அதே போல் சப்த ரிசிகள் காலில் விழும்போது அவர்கள் சிரஞ்சீவியாக வாழு என்றார்கள். அப்புறம்தான் அவர்களுக்கே மார்கண்டேயனின் ஆயுள் கால அமைப்பு தெரிய வந்தது.இருந்தாலும் சப்த ரிஷிகளின்  ஆசிர்வாதத்தால் சிவபெருமானால் மார்கண்டேயன் சிரஞ்சிவியாக வாழ்ந்தார்  என்பது புரணாமாகும். நம்முடைய முதல் தெய்வமான பெற்றோர்கள் காலில் விழுந்து வணங்கினால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி வளமான வாழ்வு அமையும் என்பதே  உண்மையாகும்..

காது குத்துவது ஏன்?


பொதுவாக காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே! 

இதை பற்றி நாம் அறியாத உண்மைகளை பார்க்கலாம்......

உண்மையான தத்துவம் தம் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களை ஆண்களுக்கு அடிமையாக்கப் பலவிதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவற்றில் ஒன்று தான் இந்தக் காது குத்துவதுமாகும். இந்த நகைகள் - ஓட்டைகள் எல்லாம் எதற்காக என்றால், கொஞ்சம் வலுவான பெண்களை ஆண்கள் (தங்கள் கணவன்) அடிக்கும் போது எங்கே திருப்பி அடித்து விடுவார்களோ என்று, ஆண்கள் அவர்கள் திரும்ப அடிக்காமல் முதுகைக் காட்டும்படிச் செய்வதற்காகவே இவை யாவும், காதிலும், மூக்கிலும் ஓட்டையைப் போட்டு நகையை மாட்டினால் ஆண் அடிக்கப் போனால் பெண் தன் முகத்தையும், காதையும் பொத்திக் கொண்டு முதுகைக் காட்டுவாள். அதற்குத் தான் இந்த நகைகள் பயன்படுகின்றன...


Friday, 6 June 2014

குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.

இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.

சரி உண்மையில் குங்குமப்பூவை கற்பஸ்திரிகள் பயன்படுத்தி வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்குமா என்றால், அதில் துளி கூட உண்மையில்லை என்பதே உண்மை. குழந்தை சிவப்பாக பிறப்பதும், கருப்பாக பிறப்பதும் நமது பரம்பரையினர்களின் ஜீன்கள் சம்மத்தப்பட்ட விஷயம் தானே தவிர, இதில் குங்குமபூவிற்கு எந்த பங்கும் இல்லை, ஆனால், இதனை காட்டிலும் பல எண்ணற்ற பயன்களை கர்ப்பிணிப்பெண்களுக்கு தரக்கூடியது குங்குமபூ.

குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.

இரத்தம் சுத்தமடைய

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.

குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு

பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.

குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.

தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.

ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .

காலை உணவாக ரொட்டி சாப்பிடுகிறீர்களா : உஷார் ?


தமிழகத்தின் இன்றைய காலை உணவுகள் காபி, டீ, இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ரொட்டி, கம்பெனி உணவுகள் என இருக்கிறது. இவை அமிலம், வாயு, பசைத்தன்மை நிறைந்தவை. 

பிரேக் பாஸ்ட் என்றால் என்ன?  விரதத்தை முறிப்பது அல்லது முடிப்பதுதானே. பழச்சாறுகளில் தானே விரதத்தை முடிக்க வேண்டும். மக்கள் விரதமே இருக்கவில்லையே. இக்காலத்தில் இரவில், தாமதமாக பலவிதமாக அதிக உணவுகளை உண்கிறார்கள். இதுவே செரிமானமாகாமல் திணறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் காலையில் புளித்த மாவுப் பண்டங்களை நிரப்பினால் எல்லா நோய்களும் வரும். 

ரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். - See more at: http://www.thoothuonline.com/archives/26678#sthash.Siy5PlkI.dpuf
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். - See more at: http://www.thoothuonline.com/archives/26678#sthash.Siy5PlkI.dpuf
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். - See more at: http://www.thoothuonline.com/archives/26678#sthash.Siy5PlkI.dpuf
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். - See more at: http://www.thoothuonline.com/archives/26678#sthash.Siy5PlkI.dpuf
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு , காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
 
காலையில் முதலில் தண்ணீரை தாராளமாகக் குடித்து குடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். அடுத்து பழச்சாறுகளையும், பழங்களையும் சாப்பிடலாம். சீரகம், கொத்தமல்லி, சுக்கு போன்றவற்றுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காபி போல தயாரித்து சாப்பிடலாம்.

இயற்கை மருத்துவ முறைப்படி, பூசணி சாறு, அருகம்புல் சாறு, இளநீர் போன்றவற்றை சாப்பிடலாம். இவை அமிலத்தை குறைத்து ஆல்கலைன் தன்மையை உண்டாக்கும்.

காலை உணவு சிறுதானிய கஞ்சியாக இருக்கலாம். அதில் தேங்காய் துருவல் மட்டும் சேர்த்தால் போதும். தேங்காயில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளன. இது தாய்ப்பாலுக்கு சமமானது.

காலையில் எழுந்தது முதல் சுமார் மூன்று மணி நேரத்திற்கு உடம்பு சுத்தப்படுத்தும் வேலையை சிறப்பாகச் செய்யும். அதற்கு வாய்ப்பு தர வேண்டும். சுத்தப்படுத்துவதற்கு உதவி செய்யும் நீர் ஆகாரங்களைத்தான் சாப்பிட வேண்டும்.

நமது முன்னோர்கள் கிராமங்களில் காலை உணவாக சிறிதளவு மாவுப் பொருளும் (சோறு, கூழ், கஞ்சி) அத்துடன் நிறைய தண்ணீரும் சேர்த்து குடித்து விட்டு மண்ணில் காற்றில் வெய்யிலில் உழைப்பில் ஈடுபட்டார்கள். அப்போது நிறைய தண்ணீர் குடிப்பார்கள். உடம்பு தூய்மையான பின்புதான் மதியம் முக்கிய உணவு உண்பார்கள். இரவு உணவும் நேரத்தில் சாப்பிட்டு விடுவார்கள்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும். 

எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

Sunday, 1 June 2014

மொட்டை போடுவது எதற்காக?

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வயதிலிருந்து மூன்று வயதுக்குள் அவரவர் குலதெய்வ கோயிலில் முடிகாணிக்கை அதாவது மொட்டை போடும் பழக்கம் இன்றும் வழக்கமாகி பின்பற்றப்படுகிறது.

இந்த மொட்டை போடும் பழக்கம் எப்படி வந்தது? எதற்காக வந்தது?

மகா பாரதத்தில் பாண்டவர்களின் தர்மபத்தினியான திரவுபதி ஓர் இரவில் தன் ஆசை குழந்தைகளோடு உறங்கிக்கொண்டிருக்கிறாள். அஸ்வத்தாமன் திரவுபதியின் வம்சத்தை அழித்தே தீருவேன் என்று ஆவேசம் கொண்டு திரிகிறான். அன்று பாண்டவர்கள் இல்லை.

இது தான் சமயம் என்று அஸ்வத்தாமன் திரவுபதியின் குழந்தைகளை கொன்று விட்டு ஓடிவிடுகிறான். இதை அறிந்த அர்ஜூனன் குழந்தைகளை கொன்றவனை தலைகொய்வேன் என்று சபதமிடுகிறான்.

தங்கள் குல குருவின் மகன் அஸ்வத்தாமன் தான் இந்த பாதக செயலை செய்திருப்பது அறிந்து அர்ஜூனன் அவன் தலையெடுக்க துடிக்கிறான்.

திரவுபதிஉடனே, குலகுருவின் மைந்தனை கொல்வது பாவம் என்று அவனை தடுக்கிறாள். எடுத்த சபதத்தை முடிக்காமல்அர்ஜூனன் ஓயமாட்டான் என்று அர்ஜூனன் அடம்பிடிக்கிறான். முடிவில் குழப்பம் தீர்த்து வைக்க கிருஷ்ணன்,"அர்ஜூனா, நீ அஸ்வத்தாமனின் தலையை கொய்வதற்கு பதில் தலையில் உள்ள முடியை எடுத்துவிடு. அதுவே அவனை கொன்றதற்கு சமம்' என்று உபாயம் சொன்னார்.

அப்படியே அர்ஜூனனும் செய்கிறான். இதிலிருந்து தான் உயிருக்கு பதில் மயிர் கொடுக்கும் சம்பிரதாயம் வந்தது.

அடுத்ததாக, அந்தக் காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவியும் அவனோடு தீயில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. காலமாற்றத்தில் கணவன் இறந்துவிட்டால் அவனோடு உடன்கட்டை ஏறி உயிர்துறப்பதற்கு பதிலாக, கணவனை பறிக்கொடுத்த மனைவி உயிருக்கு பதிலாக மயிரைக்கொடுத்து மொட்டையிட்டுக்கொண்டாள்.

அதிலிருந்து தான் விதவைகள் மொட்டை போடும் பழக்கம் தொடர்ந்தது. இன்னொரு வகையினரும் மொட்டைபோடுவர். அவர்கள் துறவிகள். துறவு என்பது மறுபிறவி எடுப்பதாகும். அதனால்தான் எடுத்தப்பிறவி உயிரை விட்டதாக கருதி முடியை மழித்துக்கொள்கின்றனர்.புதிய நாமம் சூட்டிக்கொள்கின்றனர்.

மேற்சொன்ன காரணம் கருதிய செயல்களுக்காக மொட்டை போட்ட பழக்கத்தை இன்று நம்மவர்கள் இறைவனிடம்,"இது நடந்துவிட்டால் மொட்டை போடுகிறேன்!' என்று பிரார்த்தனை செய்து அவர்கள் எண்ணியது நடந்ததும், பிரார்த்தனை ஈடேறியதற்கு இறைவனுக்கு மொட்டை போடுகின்றனர்.