Sunday, 17 December 2017

இறந்த பின்னர் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டுவது ஏன் தெரியுமா?

இறந்த பின்னர் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டுவது ஏன் தெரியுமா?

இதற்கு விஞ்ஞான ரீதியில் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா, அல்லது மெஞ்ஞான ரீதியில் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்றும் பலர் வினா எழுப்புகின்றனர்.

இந்த ஒரு ரூபாய் நாணயத்தை நெற்றியில் ஒட்டுவதற்கு விஞ்ஞான ரீதியாக எந்தவிதமான காரணமும் இல்லையாம்.

உடம்பிற்கும் அந்த நாணயத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாதாம்.

எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் , ஒருவர் இறந்த பின்பு வெறும் பிணம் மட்டுமே.

ஒருவர் இறந்த பிறகு எந்தவிதமான செல்வத்தையும், உடமைகளையும் எடுத்து செல்லமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நாணயத்தை வைப்பதன் மூலம் ஒருவரின் பேராசையினால் எந்த பயனும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றதாம்.

கோடிகோடியாக பணம் சொத்துக்கள் சேர்த்து வைத்தும் சிலர் யாருக்கும் கொடுக்கமாட்டார்கள் அப்படியானவர்களிற்கு இறந்த பிறகு நீங்கள் ஒரு ரூபாயை கூட கொண்டு செல்லமாட்டீர்கள் என எடுத்துக்காட்டவே இந்த நாணயம் வைக்கப்படுகின்றதாம்.


Friday, 15 December 2017

வீட்டில் முருங்கை வளர்ப்பவர்கள் வெறுங்கையோடு போவார்கள் என்பது உண்மையா?


"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்பது பழமொழி". 

ஆம் வீட்டில் முருங்கை வளர்ப்பவர்கள் வெறுங்கையோடு போவார்கள் என்பது உண்மையே.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் காய் ,பூ , இழை அனைத்துமே மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டவை .

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அடிக்கடி முருங்கையை உண்டுவர, என்றும் நீங்காத இளமையுடன் "வயதான பின்பும் கோல் (கைத்தடியின்) துணையில்லாமல் வெறும்கையோடு நடந்து  செல்லலாம்" என்பதே இந்த பழமொழி.

புதிதாக வாடகை வீட்டிற்கு குடிபெயரும் போது முதலில் கொண்டுசெல்ல வேண்டிய பொருட்கள் என்ன?


புதிதாக வாடகை வீட்டிற்கு குடிபெயரும் போது முதலில் விநாயகர் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படத்தினை வீட்டில் வைக்க வேண்டும்.

பின்பு சிறிது புளி, உப்பும் வைப்பர். சமையல் புளி வீட்டில் உள்ள எதிர்மறை அலைகளை  விரட்டுவதாக நம்பப்படுகிறது. உப்பு ஒருவித சாங்கிதமாக நம்பப்படுகிறது.

அதன்பின் குத்துவிளக்கு ,அடுப்பு முதலிய பொருட்களை வைக்க வேண்டும்.

Thursday, 14 December 2017

பெண்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடி பிரச்சனைக்கு, இயற்கை தீர்வு




சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும்.

ஒரு டீஸ்பூன் சோள மாவில், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.

காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

அரும்பு மீசைபோல் உள்ள முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும் தினந்தோறும் இதுபோல் செய்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும்.

எரியூட்டப்பட்ட சாணத்தின் சாம்பல் 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆகியவை கலந்து முகத்தில் உள்ள ரோமங்கள் மீது தடவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால் முடி உதிர்ந்து சருமம் மென்மையாக காணப்படும்.

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

முகம் சிவப்பாக


கருந்துளசி இலையை தண்ணீர் விடாமல் அரைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி வர முகம் சிவப்பாக மாறுவதை காணலாம்.

இரவில் தூங்கச்செல்லும் முன் புதினா இலைகளை அரைத்து , சிறிது எலுமிச்சை சாறுடன் முகத்தில் பூசிவர முகம் சிவப்பழகு பெரும்.

தயிர் மற்றும் மஞ்சள் கலந்து பூச முகம் சிவப்பாக மாறும்.

சொத்துக்கற்றாழை ஜெல் கொண்டு தினமும் மசாஜ் செய்ய முகம் சிவப்பாக மாறும்.

தினமும் உணவில் பால் , தயிர் ,வெண்ணை என பால் பொருட்களை சேர்த்து வருவத்தின்மூலமும்  சிகப்பழகு பெறலாம்.

அதிகம் திராட்சை பழம் எடுத்துக்கொண்டாலும் உடல் சிகப்பாவதை காணலாம்.

Tuesday, 12 December 2017

மருத்துவ குறிப்புகள்


செவ்வாழைப்பழம்  உடல் பலத்தினை பெருக்கும். கண் குறைப்பாடுகள் உள்ளவர்கள் தினமும் செவ்வாழை சாப்பிட, கண் நோய்கள் நீங்கும். 

தினமும் நாவற்பழம் சாப்பிட, சர்க்கரை நோய் நீங்கும்.

ஆரஞ்சு பழம் தலைசுற்றலை போக்கும், எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

அரைக்கீரை ஜன்னி, வாத நோய்களை நீக்கும்.

அடிக்கடி எலுமிச்சை சாதம் சாப்பிட, மஞ்சள்காமாலை நீங்கும், மனநோய்க்ளை குறைக்கும். 

கறிவேப்பிலை சாறினை மோரில் கலந்து பருக, கண்பார்வை திறன் அதிகரிக்கும்.

பிரண்டையை நெய் விட்டு வதக்கி சாப்பிட, நன்றாக பசி எடுக்கும்.

தர்பூசணி நீர்சத்துமட்டுமல்ல, மூளைக்கும் பலத்தை தரும்.

பலாப்பழத்தினை நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் அடிக்கடி உண்டுவர அனைத்து நோய்களும் குணமாகும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகள்

சர்க்கரை நோய் என்பது கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஒருவகை ஹோர்மோன் குறைபாடே தவிர பெரும் நோய் அல்ல. இதனை உணவு மூலமே கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். பலரும் மருந்து மாத்திரைகள், ஊசிகள் மூலம் இன்சுலின் எடுத்துக்கொள்வதுண்டு. இப்படி எவ்வளவு நாட்கள் மாத்திரைகள் மூலம் கணையத்தினை தூண்டி இன்சுலினை சுரக்க வைக்க இயலும்?. நீண்ட நாட்கள் மருந்துகள் உட்கொண்டால் கணைய செயலிழப்பிற்கான வாய்ப்புகள் அதிகம் .

ஆரஞ்சு, மாதுளை, பீட்ரூட், பேரிச்சம்பழம் போன்ற நோய் எதிர்ப்புசக்தி உடைய உணவுகளை இன்சுலின் குறைபாடு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள முடியாது .இவை ரத்தத்தில் சக்கரையின் அளவை அதிகரித்துவிடும் .

இயற்கையாக இன்சுலின் சுரக்க , நோய் எதிர்ப்பு சக்தி பெறுக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பதனை பார்க்கலாம் வாங்க .

கொய்யாப்பழம் 

இது இயற்கையாகவே கணையத்தை பாடுதுகாக்க வல்லது. கொய்யாப்பழத்தினை அரைத்தோ , முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். இது இயற்கையாக  இன்சுலின் சுரக்க உதவுகிறது.

பனங்கிழங்கு 


பனங்கிழங்கு எங்கு கிடைத்தாலும் வாங்கி உண்ணுங்கள். உங்கள் வம்சத்திற்கே சர்க்கரை நோய் வராது.

வாழைப்பூ 

வாழையின் பூ, தண்டு, காய், அனைத்துமே இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்க வல்லது. ஆனால் வாழை பழத்தினை சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது சிறந்தது. 

கோதுமை 

கோதுமை உணவுகள் சர்க்கரைக்கு சிறந்த ஒன்று. கோதுமை கஞ்சி, சப்பாத்தி, கூழ் ஆகியவை மிக சிறந்தது.

கீரை வகைகள் 


அனைத்து கீரை வகைகளும் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. அதிலும் சிறுகுறிஞ்சான் என்னும் வகை சர்க்கரையை துரத்த வல்லது.

நாவற்பழம் 


அடிக்கடி நாவற்பழம் சாப்பிட, சர்க்கரை நோய் அறவே நீங்கும்.

Monday, 2 January 2017

ஏறுதழுவல் - சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு)

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன. பெயர்க்காரணம் சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.

வரலாறு

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயர்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வகைகள்

சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.

வேலி ஜல்லிக்கட்டு
வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.

வாடிவாசல் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

வடம் ஜல்லிக்கட்டு
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.