Tuesday, 12 May 2015

தகவல் துளிகள்

களிமண் கலந்த நீரை தூய்மையான நீராக மாற்ற பயன்படுவது ? படிகாரம்

கங்கை ஆற்றின் நீர் எந்த கடலில் கலக்கிறது ? வங்காள விரிகுடா

காவிரி நதி எங்கு பிறக்கின்றது ? குடகு மலை (கர்நாடகம் )

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு எந்த இடத்தில உள்ளது ? 7-ஆவது .

இந்தியாவில் அதிகமாக சந்தன மரம் காணப்படும் மாநிலம் ? கர்நாடகம்

நெசவு தொழிற்சாலைகள் அதிகம் காணப்படும் இந்திய மாநிலம் ? தமிழ்நாடு

வைரத் துறைமுகம் என அழைக்கப்படுவது ? கொல்கத்தா

அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் ? கேரளா

தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம் ? மே

"விக்ரம் சாராபாய்" விண்வெளி மையம் அமைத்துள்ள இடம் ? திருவனந்தபுரம்

முகப்பரு நீங்க எளிய வழிகள்

முகப்பரு முகத்தின் அழகை கெடுப்பதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். அதிலும் வலியின் போது முகப்பருவை அடிக்கடி தொடுவதால், அப்போது முகப்பரு வெடித்து பரவ ஆரம்பிக்கிறது.

முகப்பரு வரக் காரணம் என்ன?

பருவ வயதில் "ஆன்ட்ரோஜன்" என்ற இயக்குநீர் (Androgen Hormone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை "சீபம்" (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளைவெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப்பயன்படுகின்றன.

பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில்படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக்கொள்கின்றன.

சிலருக்கு பித்த நீர் அதிகம் சுரப்பதாலும் தீராத பருக்கள் வரக்கூடும்.

ஆகவே அத்தகைய முகப்பருவை போக்குவதற்கும், அதனால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்துவதற்கும் பல இயற்கை பொருட்கள் வீட்டின் சமையலறையிலேயே உள்ளது. அத்தகைய பொருட்களைக் கொண்டு பராமரித்தால், நிச்சயம் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வழிமுறைகள்:

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.

கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்.

முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்.

எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.

வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.