திருமணம் என்பது ஒருவர் வாழ்வில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வாகும்.
திருமணமே ஒருவரை
முழுமையாக்குகிறது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பை அளிக்கிறது.
வேகமாகச் செல்லும் இயந்திரமயான உலகில்
இன்று மூன்று நாள் திருமணம் மிக அருகி வருகிறது. நெருங்கிய உறவினரை
அழைத்துக் கோயிலில் திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர
வரவேற்போடு திருமணத்தை முடித்து ஒரு மண்டபத்தில் மூன்று மணி நேர வரவேற்போடு
திருமணத்தை முடித்து விடுகின்றனர்.
நிறைய வகை சீர்களின் சிறப்புக்கள் இக்கால இளம் தலைமுறையினரின் அறிவுக்கு எட்டாத நிலையிலேயே உள்ளது. இவ்வாறான ஒரு சீரின் சிறப்பு இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
திருமணத்தின் போது உப்பு சக்கரை வாங்கும் சடங்கு எதற்கு ?
திருமண நிச்சயதார்த்தம் முடிந்தபின் சில நாட்களில் மணமகன் வீட்டார், பெண் வீட்டார் சார்பில் கூடைகளுடன் கடைக்குச் சென்று தனித்தனியாக உப்பும், சர்க்கரையும் வாங்கி இருவரும் பரிமாறிக் கொள்வர். இத்தகைய சடங்குகள் கிராமங்களில் மிக பிரசித்தி பெற்றதாகும்.
‘நன்மையிலும், தீமையிலும் நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் பங்கு கொள்ள வேண்டும்’
என்பது இதன் குறிப்பாகும்.
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி.
இதனை ‘உப்பு சத்தியம்’ என்றும் சில இடங்களில் . உப்பு சர்க்கரை வாங்கி வந்து மணமகன் வீட்டார், பெண் வீட்டார் பிள்ளையார் கோயிலில் பரிமாறிக் கொள்வர்.
0 komentar:
Post a Comment