Sunday, 17 December 2017

இறந்த பின்னர் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டுவது ஏன் தெரியுமா?

இறந்த பின்னர் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டுவது ஏன் தெரியுமா?

இதற்கு விஞ்ஞான ரீதியில் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா, அல்லது மெஞ்ஞான ரீதியில் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்றும் பலர் வினா எழுப்புகின்றனர்.

இந்த ஒரு ரூபாய் நாணயத்தை நெற்றியில் ஒட்டுவதற்கு விஞ்ஞான ரீதியாக எந்தவிதமான காரணமும் இல்லையாம்.

உடம்பிற்கும் அந்த நாணயத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாதாம்.

எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் , ஒருவர் இறந்த பின்பு வெறும் பிணம் மட்டுமே.

ஒருவர் இறந்த பிறகு எந்தவிதமான செல்வத்தையும், உடமைகளையும் எடுத்து செல்லமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நாணயத்தை வைப்பதன் மூலம் ஒருவரின் பேராசையினால் எந்த பயனும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றதாம்.

கோடிகோடியாக பணம் சொத்துக்கள் சேர்த்து வைத்தும் சிலர் யாருக்கும் கொடுக்கமாட்டார்கள் அப்படியானவர்களிற்கு இறந்த பிறகு நீங்கள் ஒரு ரூபாயை கூட கொண்டு செல்லமாட்டீர்கள் என எடுத்துக்காட்டவே இந்த நாணயம் வைக்கப்படுகின்றதாம்.


0 komentar:

Post a Comment