Wednesday, 15 December 2021

தமிழ்நாட்டின் கால மற்றும் பருவ நிலைகள்

காலநிலை:

• ஒரு இடத்தில் நிமிடத்திற்கு நிமிடம் வளிமண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களே வானிலை.
• காலநிலை என்பது புவியில 30 ஆண்டுகளில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் சராசரி ஆகும்.
• தமிழகம் வெப்பமண்டலக் காலநிலை வகையைச் சார்ந்தது.
• மே – தமிழகத்தில் மிக வெப்பமான மாதம். ஜனவரி – மிகக் குளிரான மாதம்.
• தமிழகம் தென்மேற்கு பருவகாற்றால் ஜீன் முதல் செப்டம்பர் வரையிலும் (22 சதவீதம் மழை), வடகிழக்குப் பருவகாற்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் (57 சதவீதம்) மழை பெறுகிறது. ஆனால் பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே அதிக அளவில் பெறுகிறது. சூறாவழியினால் 21 சதவீதம் மழை பெறுகிறது.
• கன்னியாகுமரி இரு பருவகாலத்திலும் மழை பெறுகிறது.
• நீலகிரி – தென்மேற்கு பருவகாலத்தில் அதிக மழை பெறும் மாவட்டம்.
• கடற்கரை மாவட்டங்கள் – வடகிழக்கு பருவகாலத்தில் அதிக மழை பெறுகின்றன.
• தமிழகத்தின் சராசரி, ஆண்டு மழையளவு 98 செ.மீ.
தமிழ்நாட்டின் பருவ காலங்கள்:
பருவங்கள் – தமிழ் பருவங்கள் – தமிழ் மாதங்கள்
கோடை (ஏப்ரல் -ஆகஸ்டு) – இளவேனில்,முது வேனில் – சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி
மழைக்காலம் (ஆகஸ்டு – டிசம்பர்) – கார்காலம், குளிர்காலம் – ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
குளிர்காலம் (டிசம்பர்- மார்ச்) – முன்பனி, பின்பனி – மார்கழி, தை, மாசி, பங்குனி
மண் வகைகள்
செம்மண் – தமிழகத்தில் மிகப் பரந்த அளவில் காணப்படும் மண் வகை.
கரிசல் மண் – கோவை, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. இது பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்.
வண்டல் மண் – இது தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. இது நெல் விளைவதற்கு ஏற்ற மண் ஆகும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை
மலை மண் – இது மலைப் பகுதியில் காணப்படும் வளமற்ற மண் சரளை மண் – இது இந்தியாவின் பிரதான மண் வகை ஆகும். இது பீடபூமிப் பகுதிகளில் காணப்படும்
காடுகள்:
• தேசிய காடுகள் கொள்கை (1988) இன்படி ஒரு மாநிலத்தின் மொத்தப் பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தின் காடுகள் 17 சதவீதப் பரப்பிலுள்ளது.
• நீலகிரி மாவட்டம் அதிக பரப்பில் காடுகள் கொண்ட மாவட்டம்.
காடுகளின் வகைகள்:

• பசுமை மாறாக் காடுகள் (அந்தமான் நிக்கோபர் தீவுகள், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்)
• இலையுதிர் காடுகள் (மான்சூன் காடுகள்)
• சதுப்புநிலம் மற்றும் மாங்குரோவ் காடுகள்
• பிச்சாவரம் – கடலூர்
• வேதாரண்யம், கோடியக்கரை – நாகபட்டிணம்
• முட்புதர் காடுகள்
• ஊசி இலைக் காடுகள்
• பாலை நிலத் தாவரங்கள்

பாண்டவர் பூமி என அழைக்கப்பட காரணம்?

பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கும், இவர்கள் பெரியப்பா திருதராஷ்டிரனின் மகன்களான கௌரவர்களுக்கும் நடந்த போரான குருட்சேத்திரப் போரே மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாகும்.
ஐந்து பாண்டவர்கள் தர்மன் பீமன் அர்ஜூனன் நகுலன் சகாதேவன்