Thursday, 21 August 2014

கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்திற்கு கேடு உண்டாகுமா ?

நம் முன்னோர்கள் பேச்சு வாக்கில் பல விஷயங்களை சொல்லி விட்டு சென்றுள்ளனர் .அதன் அர்த்தம் தெரியாமல் நாம் பலவற்றை மறந்து உள்ளோம் .மேலும் அதன் அர்த்தம் தெரியாததல் சிலவற்றை கடைபிடிப்பதும் இல்லை. அவர்கள் சொல்லிவிட்டு சென்றதில் ஒன்று தான் இந்த கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்திற்கு கேடு உண்டாகும் என்பது அதை பற்றி இந்த பதிவில் பார்போம் .

நாம் காலையில் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும் போது நல்ல சுறுசுறுப்பாக செல்வோம் ,மாலை வீடு திரும்பும்போது சோம்பலாக களைப்போடு வருவோம் காலையில் இருந்த சுறுசுறுப்பு எங்கே போய்விட்டது.நாம் வேலை செய்யும் போது நம் உடல் சக்தி செலவாகிறது அதனால் நாம் சக்தி இழந்து மாலை வரும்போது களைப்படைகிறோம் இந்த சக்தியை தான் பிராண சக்தி என்பார்கள் .

நாம் எந்த வேலை செய்தாலும் நாம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும். நடப்பது ஓடுவது பார்பது பேசுவது இது போல் எந்த வேலை செய்தாலும் நாம் உடலில் உள்ள பிராண சக்தி செலவாகும் .

எந்நேரமும் கால் ஆட்டி கொண்டே இருப்பதால் நாம் உடலில் சேமித்து வைத்து உள்ள சக்தி அனைத்தும் செலவாகிவிடும்.அதனால் நாம் அன்றாட வேலைகள் செய்யும் போது நாம் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காது அதனால் நாம் விரைவில் களைப்படைவோம், இது தொடரும் போது சில காலம் கழித்து.நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் விரைவில் நோய்வாய்படுவோம்.

இது போல் தேவை இல்லாமல் தொடர்ந்து  நோய்வாய்பட்டால், வேலைக்கும் செல்ல முடியாது மருத்துவ செலவும் அதிகம் ஏற்படும்.இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மனக்கஷ்டம் , பணக்கஷ்டம் ஏற்ப்படும். இந்த விளக்கத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லி விளக்கம் கொடுக்க முடியாது என்பதால் அதை சுருக்கி கால் ஆட்டி கொண்டு இருந்தால் குடும்பத்திற்கு கேடு உண்டாகும் , அல்லது கால் ஆட்டி கொண்டே இருந்தால் குடும்பத்தையே ஆட்டி வைக்கும் என்று சொல்லி விட்டு சென்றுள்ளனர் நம் முன்னோர்கள் .

பயனுள்ள தகவல்கள் ...!!!

**ஆப்பிரிக்கா என்றால் வெயில் நாடுஎன்று பொருள்

**பத்து வயதுப் பையனுக்குஒரு காயம் குணமாக ஆறு நாள் ஆனால் அதே அளவு காயம் ஆற இருபது வயது இளைஞனுக்கு பத்து நாட்களும்,முப்பது வயதுக்காரருக்கு பதிமூன்று நாட்களும்,நாற்பது வயதுக்காரருக்கு பதினெட்டு நாட்களும்,அறுபது வயதுக்காரருக்கு முப்பத்திரண்டு நாட்களும் ஆகும்.
 
**வாயில் சுரக்கும் உமிழ் நீரில் ptylin என்ற என்சைம் உள்ளது.இது ஜீரணத்திற்குத் தேவையானது.இது carbohydrate ஐ சர்க்கரை ஆக மாற்றுவதற்குச் சிறிது நேரம் பிடிக்கும்.எனவே உமிழ்  நீருடன் உணவை நன்றாகக் கலக்கச் செய்யவும், சிறிது நேரம் ptlyin ஐ ஆக்கத்திற்கு உட்படுத்தவும் உதவும் வகையில் பற்களால் உணவை சிறிது நேரம் நன்றாய் அரைத்து மென்று கொண்டிருப்பது நல்லது.எனவே உணவை அவசரம் அவசரமாக விழுங்கக் கூடாது.
 
** செண்டுகளின் நறுமணத்திற்குக் காரணம் அவற்றில் ஆம்பர் கிரீஸ் எண்ணும் பொருள் இருப்பதுதான்.இந்த ஆம்பர் கிரீஸ் ஒரு வகை திமிங்கலங்களின் குடலில் மட்டுமே உற்பத்தி ஆகிறது.

Thursday, 7 August 2014

மாமிசத்தை வேறு இடத்துக்கு உணவுக்காக கொண்டு போகும் போது கரித் துண்டு (charcoal) வைத்து எடுத்து போகவேண்டும், சுடுகாடு வழியாக போகக் கூடாது என்பது ஏன்?

கரி சயனைட் போன்ற கொடூரமான விஷ வாயுக்களைக் கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையது. 

மேலும் கரித்தூள் குழந்தைகளுக்கு  மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உப்புசம், வாயு மற்றும் அஜீரணக் கோளாறுகளையும், அல்சர் போன்ற வயிற்று சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டது. இதனாலேயே கரி துண்டினை பயன்படுத்துகின்றனர் .

சுடுகாடு வழியாக கறி எடுத்து செல்லகூடாது என்பதன் காரணம் ,நோய் தொற்று மற்றும் இறந்தவர் உடலில் இருந்து கிளம்பும் நோய்க்கிருமிகள் போன்றவை மாமிசத்தை எளிதில் தாக்கக் கூடும் என்பதால் தவிர , பேய் பிசாசு என்பது நாம் இவற்றை பின்பற்ற வேண்டும் என்பதற்காக நம் முன்னோர் கூரிவைத்தவை ஆகும் .

இடக்கண் துடித்தால் நல்லதா கெட்டதா?

பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் அபசகுனம் என்றும் கூறுவார்கள். 

இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், அதீத உழைப்பு, தூக்கமின்மை, மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் போன்ற காரணங்கள் வலது கண்ணை துடிக்கச் செய்கின்றன.

மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி , எண்டார்பின் சுரபிகள்  என்ற சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.

Wednesday, 6 August 2014

முளைப்பாரி எடுப்பது எதற்காக ?

முளைப்பாரி பற்றி பல கற்பனைகதைகள் நிகழ்ந்தாலும், முளைப்பாரி ஓர் அறம் தொடர்பான செயலாக கருதப்படுகிறது, இது பௌத்த தொடர்பு விழாவாக இருக்கலாம் என கருதப்படுகிறது, ஏனென்றால் பர்மா, தாய்லாந்து, கம்போடியா, போன்ற நாடுகளிலும் இது பாரம்பரிய விழாவாக நடைபெறுகிறது.

முற்காலத்தில் தூரப்பயணங்களுக்கு செல்வோர்கள் நீண்ட நாட்களுக்கு உணவுகளை எடுத்து செல்ல முடியாது இதுபோன்ற காரணத்தால் சமைக்காமல் சாப்பிடும் தானியங்களை ஆற்று ஓரங்களிலும் குளத்து ஓரங்களிலும் நட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த முறை ஒழுங்குபடுத்தப்பட்டது.

பெண் தெயவ வழிபாட்டு முறைகளில் இதை ஒரு சடங்காக ஆக்கினர். முக்கியமாக மழைகாலம் துவங்கும் சில நாட்களுக்கு முன்பு அம்மன் திருவிழாக்களின் போது வீட்டில் தானியங்களை மண்பானையில் இட்டு முளை உண்டாக்கி அதை ஆற்றில் கலந்துவிடுவார்கள், பிறகு அவை ஆற்றின் போக்கில் சென்று தரை தட்டிய இடங்களில் முளைவிட்டு வளரும்.

அக்காலங்களில் ஆற்றின் கரையோரங்களில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்ட வழிப்போக்கர்களும் துறவிகளும் தங்களில் பசியாற்ற முளைபாரியில் விட்ட பயிர்களின் செடியில் இருந்து தானியங்களை பிடிங்கி அவற்றை உண்டு பசியாறி வந்தனர்.

கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது ஏன்?

நம் முன்னோர்கள் எதையுமே ஒரு காரணமின்றி செய்வதில்லை .

கர்பிணி பெண்கள் கடைசி மூன்று மாதங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் . அக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்பிலை காப்பு அணிவித்தனர்.

எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்படுவதற்கு கை நிறைய கண்ணாடி வளையல் அணிவித்து அவை உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினர். மேலும் கண்ணாடி வளையல் சத்ததிற்கு குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டி குப்பை கொட்ட கூடாது ஏன் ?

நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்திற்கும் விஞ்ஞானரீதியான காரணங்கள் இருகின்றன.

அக்காலத்தில் மின்சாரம் இல்லை. சிறு அகல்விளக்கு, வெளிச்சம் பெரியதாக தந்திருக்காது. அச்சமயம் நாம் பயன்படுத்திய சிறுபொருட்கள் ( விலையுயர்ந்த அல்லது தேவையுள்ள சிறிய பொருட்கள்) ஏதேனும் தவறுதலாக கீழே விழுந்து கிடந்து, கூட்டிப் பெருக்கி குப்பையாக எடுக்கும்பொழுது அவற்றுடன் சேர்த்து கொட்டபடலாம். இதனையே பகல் நேரத்தில் செய்தால் ஒருவேளை நம் கண்களுக்குப் புலப்படலாம். எனவே மாலையில் கூட்டிப் பெருக்குதல் கூடாது என சொல்லி சென்றனர்.  

இதனை விளக்கு வைத்தவுடன் வீடு கூட்டினால் "மகாலட்சுமி" வீட்டை விட்டு போய்விடும் என்று கூறி வைத்துள்ளனர் . 

இப்போ புரிஞ்சுதா மகாலட்சுமி'னு நம்ம பயன்படுத்துற பொருள சொல்லிருக்காங்க .

என்னே நம் முன்னோர்களின்  அறிவு ...!!!

வீட்டில், பூஜைகளில் சாம்பிராணி உபயோகிப்பது ஏன் ?

சாம்பிராணி ஒரு வகை மரப்பிசினே. 

தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் இருக்கும். சாம்பிராணி புகை போடும் பொழுது விஷ ஜந்துக்கள் தொல்லை இருக்காது. இவை வெளியேறிவிடும். எனவே அந்தி சாயும் வேளைகளில் சாம்பிராணி தூபம் போடுவர். 

அதன் நறுமணம் மிகுந்த வாசனைக்காக அதனை பூஜைகளிலும் உபயோகிகின்றனர் .

பழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்!

முதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக  இருக்கிறதாம் .

உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறதாம்.

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது.

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில...

காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்

இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது.

இந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும்.

அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.

எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அரு‌‌கில் கூட வராது.