Tuesday, 12 December 2017

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகள்

சர்க்கரை நோய் என்பது கணையத்தில் சுரக்கும் இன்சுலின் என்ற ஒருவகை ஹோர்மோன் குறைபாடே தவிர பெரும் நோய் அல்ல. இதனை உணவு மூலமே கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். பலரும் மருந்து மாத்திரைகள், ஊசிகள் மூலம் இன்சுலின் எடுத்துக்கொள்வதுண்டு. இப்படி எவ்வளவு நாட்கள் மாத்திரைகள் மூலம் கணையத்தினை தூண்டி இன்சுலினை சுரக்க வைக்க இயலும்?. நீண்ட நாட்கள் மருந்துகள் உட்கொண்டால் கணைய செயலிழப்பிற்கான வாய்ப்புகள் அதிகம் .

ஆரஞ்சு, மாதுளை, பீட்ரூட், பேரிச்சம்பழம் போன்ற நோய் எதிர்ப்புசக்தி உடைய உணவுகளை இன்சுலின் குறைபாடு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள முடியாது .இவை ரத்தத்தில் சக்கரையின் அளவை அதிகரித்துவிடும் .

இயற்கையாக இன்சுலின் சுரக்க , நோய் எதிர்ப்பு சக்தி பெறுக என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்பதனை பார்க்கலாம் வாங்க .

கொய்யாப்பழம் 

இது இயற்கையாகவே கணையத்தை பாடுதுகாக்க வல்லது. கொய்யாப்பழத்தினை அரைத்தோ , முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். இது இயற்கையாக  இன்சுலின் சுரக்க உதவுகிறது.

பனங்கிழங்கு 


பனங்கிழங்கு எங்கு கிடைத்தாலும் வாங்கி உண்ணுங்கள். உங்கள் வம்சத்திற்கே சர்க்கரை நோய் வராது.

வாழைப்பூ 

வாழையின் பூ, தண்டு, காய், அனைத்துமே இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்க வல்லது. ஆனால் வாழை பழத்தினை சர்க்கரை உள்ளவர்கள் தவிர்ப்பது சிறந்தது. 

கோதுமை 

கோதுமை உணவுகள் சர்க்கரைக்கு சிறந்த ஒன்று. கோதுமை கஞ்சி, சப்பாத்தி, கூழ் ஆகியவை மிக சிறந்தது.

கீரை வகைகள் 


அனைத்து கீரை வகைகளும் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. அதிலும் சிறுகுறிஞ்சான் என்னும் வகை சர்க்கரையை துரத்த வல்லது.

நாவற்பழம் 


அடிக்கடி நாவற்பழம் சாப்பிட, சர்க்கரை நோய் அறவே நீங்கும்.

0 komentar:

Post a Comment