Wednesday, 15 December 2021

தமிழ்நாட்டின் கால மற்றும் பருவ நிலைகள்

காலநிலை:

• ஒரு இடத்தில் நிமிடத்திற்கு நிமிடம் வளிமண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களே வானிலை.
• காலநிலை என்பது புவியில 30 ஆண்டுகளில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தின் சராசரி ஆகும்.
• தமிழகம் வெப்பமண்டலக் காலநிலை வகையைச் சார்ந்தது.
• மே – தமிழகத்தில் மிக வெப்பமான மாதம். ஜனவரி – மிகக் குளிரான மாதம்.
• தமிழகம் தென்மேற்கு பருவகாற்றால் ஜீன் முதல் செப்டம்பர் வரையிலும் (22 சதவீதம் மழை), வடகிழக்குப் பருவகாற்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் (57 சதவீதம்) மழை பெறுகிறது. ஆனால் பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே அதிக அளவில் பெறுகிறது. சூறாவழியினால் 21 சதவீதம் மழை பெறுகிறது.
• கன்னியாகுமரி இரு பருவகாலத்திலும் மழை பெறுகிறது.
• நீலகிரி – தென்மேற்கு பருவகாலத்தில் அதிக மழை பெறும் மாவட்டம்.
• கடற்கரை மாவட்டங்கள் – வடகிழக்கு பருவகாலத்தில் அதிக மழை பெறுகின்றன.
• தமிழகத்தின் சராசரி, ஆண்டு மழையளவு 98 செ.மீ.
தமிழ்நாட்டின் பருவ காலங்கள்:
பருவங்கள் – தமிழ் பருவங்கள் – தமிழ் மாதங்கள்
கோடை (ஏப்ரல் -ஆகஸ்டு) – இளவேனில்,முது வேனில் – சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி
மழைக்காலம் (ஆகஸ்டு – டிசம்பர்) – கார்காலம், குளிர்காலம் – ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
குளிர்காலம் (டிசம்பர்- மார்ச்) – முன்பனி, பின்பனி – மார்கழி, தை, மாசி, பங்குனி
மண் வகைகள்
செம்மண் – தமிழகத்தில் மிகப் பரந்த அளவில் காணப்படும் மண் வகை.
கரிசல் மண் – கோவை, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. இது பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்.
வண்டல் மண் – இது தஞ்சை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகிறது. இது நெல் விளைவதற்கு ஏற்ற மண் ஆகும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை
மலை மண் – இது மலைப் பகுதியில் காணப்படும் வளமற்ற மண் சரளை மண் – இது இந்தியாவின் பிரதான மண் வகை ஆகும். இது பீடபூமிப் பகுதிகளில் காணப்படும்
காடுகள்:
• தேசிய காடுகள் கொள்கை (1988) இன்படி ஒரு மாநிலத்தின் மொத்தப் பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தின் காடுகள் 17 சதவீதப் பரப்பிலுள்ளது.
• நீலகிரி மாவட்டம் அதிக பரப்பில் காடுகள் கொண்ட மாவட்டம்.
காடுகளின் வகைகள்:

• பசுமை மாறாக் காடுகள் (அந்தமான் நிக்கோபர் தீவுகள், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதி மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்)
• இலையுதிர் காடுகள் (மான்சூன் காடுகள்)
• சதுப்புநிலம் மற்றும் மாங்குரோவ் காடுகள்
• பிச்சாவரம் – கடலூர்
• வேதாரண்யம், கோடியக்கரை – நாகபட்டிணம்
• முட்புதர் காடுகள்
• ஊசி இலைக் காடுகள்
• பாலை நிலத் தாவரங்கள்

பாண்டவர் பூமி என அழைக்கப்பட காரணம்?

பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கும், இவர்கள் பெரியப்பா திருதராஷ்டிரனின் மகன்களான கௌரவர்களுக்கும் நடந்த போரான குருட்சேத்திரப் போரே மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாகும்.
ஐந்து பாண்டவர்கள் தர்மன் பீமன் அர்ஜூனன் நகுலன் சகாதேவன்

Sunday, 17 December 2017

இறந்த பின்னர் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டுவது ஏன் தெரியுமா?

இறந்த பின்னர் நெற்றியில் ஒரு ரூபாய் நாணயம் ஒட்டுவது ஏன் தெரியுமா?

இதற்கு விஞ்ஞான ரீதியில் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா, அல்லது மெஞ்ஞான ரீதியில் ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்றும் பலர் வினா எழுப்புகின்றனர்.

இந்த ஒரு ரூபாய் நாணயத்தை நெற்றியில் ஒட்டுவதற்கு விஞ்ஞான ரீதியாக எந்தவிதமான காரணமும் இல்லையாம்.

உடம்பிற்கும் அந்த நாணயத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாதாம்.

எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் , ஒருவர் இறந்த பின்பு வெறும் பிணம் மட்டுமே.

ஒருவர் இறந்த பிறகு எந்தவிதமான செல்வத்தையும், உடமைகளையும் எடுத்து செல்லமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த நாணயத்தை வைப்பதன் மூலம் ஒருவரின் பேராசையினால் எந்த பயனும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றதாம்.

கோடிகோடியாக பணம் சொத்துக்கள் சேர்த்து வைத்தும் சிலர் யாருக்கும் கொடுக்கமாட்டார்கள் அப்படியானவர்களிற்கு இறந்த பிறகு நீங்கள் ஒரு ரூபாயை கூட கொண்டு செல்லமாட்டீர்கள் என எடுத்துக்காட்டவே இந்த நாணயம் வைக்கப்படுகின்றதாம்.


Friday, 15 December 2017

வீட்டில் முருங்கை வளர்ப்பவர்கள் வெறுங்கையோடு போவார்கள் என்பது உண்மையா?


"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்பது பழமொழி". 

ஆம் வீட்டில் முருங்கை வளர்ப்பவர்கள் வெறுங்கையோடு போவார்கள் என்பது உண்மையே.

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் காய் ,பூ , இழை அனைத்துமே மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டவை .

ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அடிக்கடி முருங்கையை உண்டுவர, என்றும் நீங்காத இளமையுடன் "வயதான பின்பும் கோல் (கைத்தடியின்) துணையில்லாமல் வெறும்கையோடு நடந்து  செல்லலாம்" என்பதே இந்த பழமொழி.

புதிதாக வாடகை வீட்டிற்கு குடிபெயரும் போது முதலில் கொண்டுசெல்ல வேண்டிய பொருட்கள் என்ன?


புதிதாக வாடகை வீட்டிற்கு குடிபெயரும் போது முதலில் விநாயகர் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படத்தினை வீட்டில் வைக்க வேண்டும்.

பின்பு சிறிது புளி, உப்பும் வைப்பர். சமையல் புளி வீட்டில் உள்ள எதிர்மறை அலைகளை  விரட்டுவதாக நம்பப்படுகிறது. உப்பு ஒருவித சாங்கிதமாக நம்பப்படுகிறது.

அதன்பின் குத்துவிளக்கு ,அடுப்பு முதலிய பொருட்களை வைக்க வேண்டும்.

Thursday, 14 December 2017

பெண்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடி பிரச்சனைக்கு, இயற்கை தீர்வு




சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்தால், அது முகத்தில் வளரும் முடிகளை அகற்றும்.

ஒரு டீஸ்பூன் சோள மாவில், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, இறந்த செல்களும் வெளியேறிவிடும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும்.

காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

அரும்பு மீசைபோல் உள்ள முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும் தினந்தோறும் இதுபோல் செய்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும்.

எரியூட்டப்பட்ட சாணத்தின் சாம்பல் 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் ஆகியவை கலந்து முகத்தில் உள்ள ரோமங்கள் மீது தடவ வேண்டும்.
இப்படி செய்து வந்தால் முடி உதிர்ந்து சருமம் மென்மையாக காணப்படும்.

கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

முகம் சிவப்பாக


கருந்துளசி இலையை தண்ணீர் விடாமல் அரைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி வர முகம் சிவப்பாக மாறுவதை காணலாம்.

இரவில் தூங்கச்செல்லும் முன் புதினா இலைகளை அரைத்து , சிறிது எலுமிச்சை சாறுடன் முகத்தில் பூசிவர முகம் சிவப்பழகு பெரும்.

தயிர் மற்றும் மஞ்சள் கலந்து பூச முகம் சிவப்பாக மாறும்.

சொத்துக்கற்றாழை ஜெல் கொண்டு தினமும் மசாஜ் செய்ய முகம் சிவப்பாக மாறும்.

தினமும் உணவில் பால் , தயிர் ,வெண்ணை என பால் பொருட்களை சேர்த்து வருவத்தின்மூலமும்  சிகப்பழகு பெறலாம்.

அதிகம் திராட்சை பழம் எடுத்துக்கொண்டாலும் உடல் சிகப்பாவதை காணலாம்.