Friday, 31 October 2014

முகூர்த்த நாட்கள் என்றால் என்ன ?

நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு சிறந்த நாட்களைத் தேர்ந்தெடுக்க நமது முன்னோர்கள் சில அறிவுரைகளை கொடுத்துள்ளனர். 

அப்படி கூறப்பட்ட சில விதிமுறைகளை பின்பற்றி நாம் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர்தான் முகூர்த்தம். இந்த முகூர்த்தமானது ஒவ்வொரு ஜாதகத்திற்கும் இடையில் வித்தியாசமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. 

கணவன், மனைவி பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு திருமண முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது .

மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார்.

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்


மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

மண் குதிரை இல்லை, மண் குதிர். (மண் குதிர் என்றால் நீருக்கு நடுவில் (ஆறு, கடல்) காணப்படும் சிறு நிலப்பரப்பு)

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு.
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.

படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்….
இதுவும் தப்பு
"படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்"

ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்.
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .
 சூடு அல்ல சுவடு.

சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது…
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்.
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம.

காலப்போக்கில்.நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

கற்பூரவள்ளிக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?



கற்பூரவள்ளி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. 

கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.

கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு.

இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப் படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்பூரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும்.

இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.

குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவள்ளி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

கற்பூரவள்ளி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.

மருதாணியின் மருத்துவம்

மருதாணியைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மருதாணியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப்புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகு படுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள். வடஇந்திய திருமணங்களில் திருமண நாளுக்கு முன்பு மருதாணி இடும் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறுசெடி வகையைச் சேர்ந்தது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர். கை கால்களில் எரிச்சல் உண்டாவதை தடுக்க மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.

நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதாணி இலையை அரைத்து பற்று போட்டார்கள். இதனால் நகங்கள் அழகாகின. ஆனால் தற்காலத்தில் நகப் பாலீஷ், மற்றும் கோன் மருதாணி என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை இரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவப் பயன்கள் ஏதும் கிடையாது. ஆனால் மருதாணி அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது. நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி விளங்குகிறது. நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதாணி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களின் பாதிப்புகள் நீங்கும். இக்காலங்களில் உணவில் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும். அதிக காரம், புளி கூடாது. மருதாணி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஒற்றடமிட்டால் விரைவில் குணமாகும்.

மருதாணி பூக்களை தலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும். மருதாணியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. எனவே முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.மருதாணி இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மருதாணியின் மருத்துவப் பயன்களை பல மேல்நாட்டு மருத்துவர்கள் சோதனை செய்து கண்டறிந்துள்ளனர். மருத்துவர்கள் மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும் என்று  கண்டறிந்துள்ளனர். மேலும் மருதாணியின் பூக்களால்  தொழுநோயை குணப்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருதாணிக்கு உண்டு என்று மேல்நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் மருதாணியை பயன்படுத்தி நலம்பெறச் செய்துள்ளனர் நம் சித்தர்கள்.

Monday, 20 October 2014

குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.

* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.

* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி 'நியுரோமா' எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

தினமும் காலையில் இளஞ்சூடான ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடியுங்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை  அதிகமாகிறது

உடலின் pH ஐ சீராக்குகிறது.

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையா க மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது.

உடல் எடையைக் குறைக்கிறது.எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை.

சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது. 

தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக்குறைக்கிறது. 

 வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.

மலசிக்கலை தவிர்கிறது

ஆரத்தி எடுக்கும் பழக்கம் எதற்காக ?

ஆரத்தி நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை.

ழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர். 

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. 

 தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

 ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

 வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம்.

 புதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன்? ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, கற்பூரம், நீர்.  இதேபோல் வீட்டின் வாரிசை சுமந்து வரும் தாயின் மீதும், குழந்தையின் மீதும் கண் திருஷ்டி இருக்கும் என்பதால் அந்த குழந்தை முதன் முதலாக தந்தை வீட்டிற்கு வரும் போது ஆரத்தி எடுக்கின்றனர். 

இதனை கவுரவிக்கும் விதமாகவும் கருதலாம். ஆரத்தி எடுக்கும் போது பயன்படுத்தப்படும் நீர், நெருப்பு (கற்பூரம்), இலை (வெற்றிலை) ஆகியவற்றுக்கு எந்த தீய சக்தியையும் விரட்டும் ஆற்றல் உண்டு. திலகம் இடும் பழக்கமும் சங்க காலம் முதலே இருந்து வந்தததும் குறிப்பிடத்தக்கது. அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.