Wednesday, 17 September 2014

முகப்பரு தொல்லை நீங்க


அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது.
முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.

புதினாவை அரைத்து, அதன் சாற்றை வடித்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன், அழகாகக் காணப்படும்.

1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.

எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.

பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும் துளசி இலைகளை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் பின்பு காலையில் துளசி இலைகள் ஊறிய நீரை முகத்தில் தடவி அரைமணிநேரம் காய விட்டு பின்பு கழுவினால் முகம் பளபளப்பாகவும் இருக்கும் .இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் முக பரு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் . நல்ல பலன் கிடைக்கும்

கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை ஆகிய அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் உள்ள பருக்களில் தடவி வந்தால், அவை மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய கரும்புள்ளிகளும் மறையும்.

முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.
 
சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் குணம் பெறலாம். 
 
மஞ்சள் தூளுடன் சிறிது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் பிம்பிள் உள்ள இடங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், பருக்கள் போவதோடு, அதில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும்.

பப்பாளியின் சாற்றை முகத்தில் தினமும் தடவி, காய வைத்து கழுவி வந்தால், பிம்பிளைத் தடுக்கலாம்.

தேனை நேரடியாக முகத்தில் தடவினாலும், பருக்களை குறைக்க முடியும். இதனால் மருத்துவ குணம் வாய்ந்த தேன், சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை தடுத்து, சருமத்தை பாதுகாக்கும்.

வேப்பிலையின் இலையை அரைத்து, அதினை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள காயங்களை குணப்படுத்தும் தன்மையானது, சருமத்தில் ஏற்படும் இதர பிரச்சனைகளையும் தடுத்துவிடும்.

Tuesday, 16 September 2014

இளநரை போக்க மூலிகை எண்ணெய் - நம் முன்னோர்கள் !!!

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி 
உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். 

அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். 

போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 
நாலைந்து சிறிய வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 

முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 2 இணுக்கு
கொத்தமல்லலி - சிறிதளவு
நெல்லி வற்றல் - 10 கிராம்
வெட்டிவேர் - 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநறை நீங்கும்.

Friday, 12 September 2014

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு?

முத்துச்சிற்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்துக் கிடைக்கிறது. ஒரு  உயிரினத்தில் இருந்து முத்துக் கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.

இயற்கையாக விளைவிக்கப்படும் முத்துகள் ,  சிற்பியினுள் ஏதேனும் ஒட்டுண்ணிகள், சிறு உயிரினங்கள், ஓடுகள் செல்லும்போது  அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு , சிற்பி தன்னை காத்துக்கொள்ள அதனுள்ளே நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை  உள்ளே நுழைந்த பொருளின் மீது  சுரந்து மூடிவிடும்.

எவ்வளவு காலம் சிற்பியினுள் அந்த பொருள் இருக்கின்றதோ அவ்வளவு காலமும் அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. இது போல் இயற்கையாக உருவாகும் முத்துக்கள் தான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

செயற்கை முத்து

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிற்பி உட்கொள்வதால் முத்து தோன்றுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீனர்கள் சிற்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள் ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள் சிற்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

முத்து  விளைய ஆகும் காலம் 

நல்ல நீரில் முத்துகள் உருவாக 5 முதல் 6 வருடங்கள் வரை எடுக்கும் . உப்பு நீரில் முத்துகள் உருவாக 5 முதல் 20 வருடங்கள் ஆகும் .

ஒரு சிற்பி தனது வாழ்நாளில் மொத்தம் 60 முத்துக்கள் வரை தருகிறது . முத்துக்களின் அளவு முத்துக்கள் சிற்பியினுள் இருக்கும் காலம் , நாக்கர் திரவம் சுரப்பு குறித்து வேறுபடும் .

வால்மீகி இராமாயணம் - நம் முன்னோர்கள்

உலகப்புகழ் பெற்ற இதிகாசம் ராமாயணம். ரகு வம்ச அரசனான ராமனின் கதையைக் கூறுவது ராமாயணம் ஆகும். இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் எழுதினர். தமிழ்மொழியில் ராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
வாழ்க்கையின் தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை சகோதார ஒற்றுமையை, விதியின் வலிமையை நட்பின் மேன்மையை ராமாயணத்தின் 7 காண்டங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அந்த போராட்டங்களையும் நல்ல நட்பின் துணைக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை ராமாயணத்தின் ஏழு காண்டங்கள் நமக்கு சம்பவங்களாக சொல்கிறது.
பாலகாண்டம்
ராமன் மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. ராமனது குழந்தைப் பருவம், அவனது குறும்பான விளையாட்டுக்கள், எதிர்காலத்தில் அவன் சந்திக்க போகும் சோதனைகளின் அடிப்படை போன்றவை இந்த பாலகாண்டத்தில் இருந்துதான் தொடங்குகிறது.
அயோத்தியகாண்டம்
,ராமன் சீதையை கண்டது. சீதையுடன் திருமணம். இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்தின் சம்பவங்களை சொல்கிற பகுதி இது.
ஆரண்யகாண்டம்
அரச குடும்பத்தில் ஒருத்தியாக மரியாதை தரப்பட்ட கூனி, அதே அரச குடும்பத்தை பாதகத்தில் தள்ளி, ராமன் காட்டுக்குச் அனுப்பப்பட்ட சம்பவங்களையும், ராமனது வனவாசத்தையும் காட்டுகிற பகுதி.
கிட்கிந்தா காண்டம்
விதிவசத்தால் ராமனது வனவாசத்தின் போது கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேட வானரப்படை உருவானதும் ஸ்ரீஆஞ்சனேயர் என்கிற மகிமையை பொருந்திய வானரரின் நட்பும் ராமனுக்கு அமைந்த சம்பவத்தை சொல்கிற பகுதி.
சுந்தர காண்டம்:
,சீதையைத் தேடி ஸ்ரீஆஞ்சனேயார் இலங்கைக்கு சென்றதும், அங்கே சீதையை சந்தித்து அவளுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் சொல்லி ராவணனை சந்திëத்ததும், "நீ ஒரு குரங்கு. உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?'' என்று ராவணன் பேச, "ஆம் நான் குரங்குதான். குரங்கு என்ன செய்யும் என்பதை பார்'' என்று சொல்லி இலங்கையை தீயிட்டு ராவணனை எச்சரித்தது போன்ற சம்பவங்களை உள்ளடக்கிய பகுதி இது.
யுத்த காண்டம்:
ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த கடுமையான யுத்தத்தை சொல்கிற பகுதி யுத்தகாண்டம்.
உத்தரகாண்டம்:
இலங்கை போரில் ராவணன் வீழ்ந்து, ராமன் வெற்றி பெற்று, ராமன் அயோத்திக்கு மீண்டும் அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் சொல்கிற சம்பவ பகுதி இது. இப்படியாக ஏழு காண்டங்களை கொண்டது வால்மீகி ராமாயண காவியம்.
குடும்பத்தில் நிம்மதி இல்லாதவர்கள், கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினை விலக, சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்கு சென்றது, அங்கே சீதையை பார்த்தது பற்றிய தகவலை ராமனுக்கு சொல்ல, ராமன் மகிழந்தது போன்ற சம்பவத்தை உள்ளடக்கிய சுந்தரகாண்டத்தை படித்தால் சுபிட்சம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். 
வால்மீகி இராமாயணம் பதிவிறக்கம் செய்ய ,

பகுதி 1 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 2 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

 பகுதி 3 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.


பகுதி 4 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 5 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 6 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.


பகுதி 7 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 8 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 9 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 10 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 11 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 12 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 13 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 14 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 15 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 16 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 17 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

பகுதி 18 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.

இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!!

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

Wednesday, 3 September 2014

கவனிக்க வேண்டியவை ...!!!

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் – அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.

பத்து சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை உருவாக்குகிறது.

எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேத்தூள் தழையில் "அமினோ ஆசிட்" உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் . ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.

6. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.


"தாலி" என்ற சொல் எப்படி மருவி வந்தது ?

தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.

 தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். 

மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.

விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.

தாலியின் மகிமை  “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே தவிர , பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி). புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.

தாலி – தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது. 

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால்.
ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது. அவை-
1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு
ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன. 

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு.

கட்டுசோறு எளிதில் கெடுவதில்லை ஏன் ?

நம் முன்னோர்  காலத்தில் நீண்ட தூரம் வெளியூர் பயணங்கள் செல்பவர்கள் தங்களுடன் கட்டுசோறு சமைத்து வாழை இலையில் மடக்கி எடுத்து செல்வர் . அவ்வாற்று கொண்டு செல்லப்படும் சாப்பாடானது எளிதில் கெடுவதில்லை .

இத்தகைய குணத்திற்கு காரணம் , நம் முன்னோர்கள் "நல்லெண்ணெய்" பயன்படுத்தி சமைப்பதால் உண்டாகிறது .

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஊறுகாய் நல்லெண்ணையில் தயாரிக்கபடுகின்றது . இதனாலேயே  ஊறுகாய்கள் எளிதில் கெடுவதில்லை .

எண்ணெய் வகைகளில் சிவப்புத் தன்மை கொண்டது நல்லெண்ணெய். எள்ளில் இருந்து இந்த எண்ணெய் பெறப்படுகிறது.

 மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல்,உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய், ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியதும் கூட.
நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூல சூட்டை தணிக்கும். உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி, தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.

பூப்பெய்தும் இளம்பெண்களுக்கு சுத்தமான நல்லெண்ணெய் சிறிதளவு குடிப்பதுற்கு கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகின்றது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.

நல்லெண்ணெயின் மகத்துவத்தை இப்போது தெரிந்து இருப்பீர்கள். இனியாவது, சமையலில் நல்லெண்ணெயை சேர்த்துக்கொள்ளுங்கள்...!!!