
முகப்பரு
உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக்
கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை
பயன்படுத்த வெண்டும்.
புதினாவை அரைத்து, அதன் சாற்றை வடித்து, முகத்தில் தடவி, ஊற வைத்து,
கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், முகம்
புத்துணர்ச்சியுடன், அழகாகக் காணப்படும்.
1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும்.
பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை
ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும் துளசி இலைகளை
தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் பின்பு காலையில் துளசி
இலைகள் ஊறிய நீரை முகத்தில் தடவி அரைமணிநேரம் காய விட்டு பின்பு கழுவினால்
முகம் பளபளப்பாகவும் இருக்கும் .இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து
வந்தால் முக பரு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் . நல்ல பலன் கிடைக்கும்
கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை
ஆகிய அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் உள்ள
பருக்களில் தடவி வந்தால், அவை மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய
கரும்புள்ளிகளும் மறையும்.
முளைக்கீரை சாற்றில் முந்திரிப்பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து
முகத்தில் தடவி வந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு
உண்டாகும்.
சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் குணம் பெறலாம்.
மஞ்சள் தூளுடன் சிறிது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில்
பிம்பிள் உள்ள இடங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால்,
பருக்கள் போவதோடு, அதில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும்.
பப்பாளியின் சாற்றை முகத்தில் தினமும் தடவி, காய வைத்து கழுவி வந்தால், பிம்பிளைத் தடுக்கலாம்.
தேனை நேரடியாக முகத்தில் தடவினாலும், பருக்களை குறைக்க முடியும்.
இதனால் மருத்துவ குணம் வாய்ந்த தேன், சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை
தடுத்து, சருமத்தை பாதுகாக்கும்.
வேப்பிலையின் இலையை அரைத்து, அதினை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற
வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள காயங்களை குணப்படுத்தும் தன்மையானது,
சருமத்தில் ஏற்படும் இதர பிரச்சனைகளையும் தடுத்துவிடும்.
0 komentar:
Post a Comment