உலகப்புகழ் பெற்ற இதிகாசம் ராமாயணம். ரகு வம்ச அரசனான
ராமனின் கதையைக் கூறுவது ராமாயணம் ஆகும். இக்கதையை முதலில் வடமொழியில்
வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் எழுதினர். தமிழ்மொழியில்
ராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம்
கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
வாழ்க்கையின்
தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை சகோதார ஒற்றுமையை,
விதியின் வலிமையை நட்பின் மேன்மையை ராமாயணத்தின் 7 காண்டங்கள் நமக்கு
எடுத்துக்காட்டுகின்றன. அந்த போராட்டங்களையும் நல்ல நட்பின் துணைக்கொண்டால்
வெற்றி நிச்சயம் என்பதை ராமாயணத்தின் ஏழு காண்டங்கள் நமக்கு சம்பவங்களாக
சொல்கிறது.
பாலகாண்டம்
ராமன்
மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. ராமனது குழந்தைப் பருவம், அவனது
குறும்பான விளையாட்டுக்கள், எதிர்காலத்தில் அவன் சந்திக்க போகும்
சோதனைகளின் அடிப்படை போன்றவை இந்த பாலகாண்டத்தில் இருந்துதான்
தொடங்குகிறது.
அயோத்தியகாண்டம்
,ராமன் சீதையை கண்டது. சீதையுடன் திருமணம். இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்தின் சம்பவங்களை சொல்கிற பகுதி இது.
ஆரண்யகாண்டம்
அரச
குடும்பத்தில் ஒருத்தியாக மரியாதை தரப்பட்ட கூனி, அதே அரச குடும்பத்தை
பாதகத்தில் தள்ளி, ராமன் காட்டுக்குச் அனுப்பப்பட்ட சம்பவங்களையும், ராமனது
வனவாசத்தையும் காட்டுகிற பகுதி.
கிட்கிந்தா காண்டம்
விதிவசத்தால்
ராமனது வனவாசத்தின் போது கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேட வானரப்படை
உருவானதும் ஸ்ரீஆஞ்சனேயர் என்கிற மகிமையை பொருந்திய வானரரின் நட்பும்
ராமனுக்கு அமைந்த சம்பவத்தை சொல்கிற பகுதி.
சுந்தர காண்டம்:
,சீதையைத்
தேடி ஸ்ரீஆஞ்சனேயார் இலங்கைக்கு சென்றதும், அங்கே சீதையை சந்தித்து
அவளுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் சொல்லி ராவணனை சந்திëத்ததும், "நீ ஒரு
குரங்கு. உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?'' என்று ராவணன் பேச, "ஆம்
நான் குரங்குதான். குரங்கு என்ன செய்யும் என்பதை பார்'' என்று சொல்லி
இலங்கையை தீயிட்டு ராவணனை எச்சரித்தது போன்ற சம்பவங்களை உள்ளடக்கிய பகுதி
இது.
யுத்த காண்டம்:
ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த கடுமையான யுத்தத்தை சொல்கிற பகுதி யுத்தகாண்டம்.
உத்தரகாண்டம்:
இலங்கை
போரில் ராவணன் வீழ்ந்து, ராமன் வெற்றி பெற்று, ராமன் அயோத்திக்கு மீண்டும்
அரசனானதும், சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் சொல்கிற சம்பவ
பகுதி இது. இப்படியாக ஏழு காண்டங்களை கொண்டது வால்மீகி ராமாயண காவியம்.
குடும்பத்தில்
நிம்மதி இல்லாதவர்கள், கணவன்-மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினை விலக,
சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்கு சென்றது, அங்கே சீதையை பார்த்தது பற்றிய
தகவலை ராமனுக்கு சொல்ல, ராமன் மகிழந்தது போன்ற சம்பவத்தை உள்ளடக்கிய
சுந்தரகாண்டத்தை படித்தால் சுபிட்சம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.
பகுதி 1 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 2 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 3 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 4 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 5 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 6 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 7 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 8 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 9 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 10 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 11 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 12 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 13 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 14 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 15 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 16 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 17 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
பகுதி 18 பதிவிறக்கம் செய்ய இதனை சொடுக்கவும்.
0 komentar:
Post a Comment