முத்துச்சிற்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்துக் கிடைக்கிறது. ஒரு உயிரினத்தில் இருந்து முத்துக் கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.
இயற்கையாக விளைவிக்கப்படும் முத்துகள் , சிற்பியினுள் ஏதேனும் ஒட்டுண்ணிகள், சிறு உயிரினங்கள், ஓடுகள் செல்லும்போது அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு , சிற்பி தன்னை காத்துக்கொள்ள அதனுள்ளே நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை உள்ளே நுழைந்த பொருளின் மீது சுரந்து மூடிவிடும்.
எவ்வளவு காலம் சிற்பியினுள் அந்த பொருள் இருக்கின்றதோ அவ்வளவு காலமும் அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. இது போல் இயற்கையாக உருவாகும் முத்துக்கள் தான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.
செயற்கை முத்து
கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும்
சில அங்ககப் பொருட்களையும் சிற்பி உட்கொள்வதால் முத்து தோன்றுவதாகத்
தெரிவிக்கப்படுகிறது. சீனர்கள்
சிற்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள் ஈயத்தால் செய்த சிறு
புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து
பார்க்கும்போது முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.
ஜப்பானியர்கள் சிற்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே
தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம்
படிந்து நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு நல்ல விலைக்கு
விற்பனையாகிறது.
முத்து விளைய ஆகும் காலம்
நல்ல நீரில் முத்துகள் உருவாக 5 முதல் 6 வருடங்கள் வரை எடுக்கும் . உப்பு நீரில் முத்துகள் உருவாக 5 முதல் 20 வருடங்கள் ஆகும் .
ஒரு சிற்பி தனது வாழ்நாளில் மொத்தம் 60 முத்துக்கள் வரை தருகிறது . முத்துக்களின் அளவு முத்துக்கள் சிற்பியினுள் இருக்கும் காலம் , நாக்கர் திரவம் சுரப்பு குறித்து வேறுபடும் .
0 komentar:
Post a Comment