Tuesday, 12 May 2015

தகவல் துளிகள்

களிமண் கலந்த நீரை தூய்மையான நீராக மாற்ற பயன்படுவது ? படிகாரம்

கங்கை ஆற்றின் நீர் எந்த கடலில் கலக்கிறது ? வங்காள விரிகுடா

காவிரி நதி எங்கு பிறக்கின்றது ? குடகு மலை (கர்நாடகம் )

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு எந்த இடத்தில உள்ளது ? 7-ஆவது .

இந்தியாவில் அதிகமாக சந்தன மரம் காணப்படும் மாநிலம் ? கர்நாடகம்

நெசவு தொழிற்சாலைகள் அதிகம் காணப்படும் இந்திய மாநிலம் ? தமிழ்நாடு

வைரத் துறைமுகம் என அழைக்கப்படுவது ? கொல்கத்தா

அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் ? கேரளா

தென்னிந்தியாவில் அதிகமாக வெப்பநிலை காணப்படும் மாதம் ? மே

"விக்ரம் சாராபாய்" விண்வெளி மையம் அமைத்துள்ள இடம் ? திருவனந்தபுரம்

முகப்பரு நீங்க எளிய வழிகள்

முகப்பரு முகத்தின் அழகை கெடுப்பதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். அதிலும் வலியின் போது முகப்பருவை அடிக்கடி தொடுவதால், அப்போது முகப்பரு வெடித்து பரவ ஆரம்பிக்கிறது.

முகப்பரு வரக் காரணம் என்ன?

பருவ வயதில் "ஆன்ட்ரோஜன்" என்ற இயக்குநீர் (Androgen Hormone) ஆண், பெண் இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது. சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை "சீபம்" (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளைவெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப்பயன்படுகின்றன.

பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில்படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக்கொள்கின்றன.

சிலருக்கு பித்த நீர் அதிகம் சுரப்பதாலும் தீராத பருக்கள் வரக்கூடும்.

ஆகவே அத்தகைய முகப்பருவை போக்குவதற்கும், அதனால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்துவதற்கும் பல இயற்கை பொருட்கள் வீட்டின் சமையலறையிலேயே உள்ளது. அத்தகைய பொருட்களைக் கொண்டு பராமரித்தால், நிச்சயம் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வழிமுறைகள்:

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.

கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும்.

முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல தடவவேண்டும்.

எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.

வெள்ளரிப்பிஞ்சு முகத்தை மென்மையாக வைக்க உதவும் மற்றொரு இயற்கைப் பொருளாகும். இதனையும் ரெகுலராக பயன்படுத்தலாம்.

ஆலிவ் எண்ணெயை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்தாலும் தடுத்து விடும்.

Friday, 20 February 2015

அதிக நேரம் கணினி, தொலைக்காட்சி, அலைபேசியை பயன்படுத்துபவரா நீங்கள்?



நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும். கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.

கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்ச்சி தரும் நீல நிறங்களை பார்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தை சாறாக பிழிந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

 நீண்ட நேரம் கணினியை பார்ப்பதால் உண்டாகும் கண் எரிச்சலை போக்க, தூங்கும் முன் கண்களில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு வந்தால் , நாளிடைவில் கண் எரிச்சல் குணமாகிவிடும்.

தகவல் துளிகள் - 23/02/2015

"தாழையூத்து " எதற்கு புகழ்பெற்றது ? சிமெண்ட் உற்பத்திக்கு

இந்தியாவில் எந்த காடுகளில் சிங்கங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன ? கிர் காடுகள்

இந்தியாவில் "வைரம்" அதிகமாக கிடைக்கும் இடம் ? பன்னா


இரவில் நகம் வெட்ட கூடாது, தலை வார கூடாது, ஊசி வாங்க கூடாது என்பது ஏன் ?

அந்த காலத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் அரிக்கேன் மற்றும் அகல் விளக்கு பயன்படுத்தி வந்தார்கள். இரவு நேரத்தில் குப்பை கொட்டினால் இருட்டில் தேவையான பொருள் ஏதும் குப்பையில் கலந்து போக வாய்ப்புள்ளது.

எனவே விடிந்ததும் நன்றாக குப்பை கூடையை பார்த்து விட்டு கொட்டுவார்கள். மின்சாரம் சவுரியாமாக பயன்படுத்தும் இந்த காலத்திலும் அதையே நம் மக்கள் பின்பற்றுகிறார்கள்.

 இரவில் நகம் வெட்ட கூடாது, தலை வார கூடாது, ஊசி வாங்க கூடாது என்பதற்கும் இதுவே காராணம். உணவு பொருளில் இவைகள் தெரியாமல் கலந்து விட்டால் ஆபத்து இல்லையா அதான்.

தகவல் துளிகள்

இந்தியாவில் முதன் முதலில் எந்த ஆண்டில் பெட்ரோல் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செயப்பட்டுள்ளது ? 1948

பொருளாதார வலிமையில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது ? 4

தமிழகத்தில் ரசாயன பொருட்களுக்கு தொழில்நுட்ப பூங்கா எங்கு உள்ளது ? காரைக்குடி

தமிழ்நாட்டில் கடைசியாக 2008ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மாவட்டம் ? திருப்பூர்

தமிழ்நாடு  என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ? 1969

இந்தியாவில் யுரேனியம் சுரங்கப்பாதை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது ? ஆந்திரா

உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்த நாடு ? இந்தியா

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நதி ?  பவானி

உலக அளவில் பருத்தி ஏற்றுமதியில் இந்தியா பெற்றுள்ள இடம் ? இரண்டு

இந்தியாவின் புனித மகள் என்று காந்தியடிகள் கூறியவர் ? தில்லையடி வள்ளியம்மை

Wednesday, 18 February 2015

உலகின் சில அழகிய இடங்களைப்பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க

மூங்கில் காடுகள்  - ஜப்பான் 


தொடர்ந்து பல கிலோ மீட்டர்கள் தூரம் மூங்கில் காடுகள் நடுவே நடந்து போயிருக்கிங்களா ?  அப்படி ஒரு இடம் நம்ம ஜப்பான்ல இருக்காம் . "சகானோ" எனப்படும் மூங்கில் காடுகள் ஜப்பானின் க்யோடோ பள்ளத்தாக்கு பகுதியில் அமைத்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 16 கிலோ மீட்டர்கள். இதனுடைய அழகே காற்றுக்கு அந்த மரங்கள் எழுப்புற சத்தம் தானம்.

கருப்பு காடுகள் - ஜெர்மனி

 ஜெர்மனியின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று இந்த கருப்பு காடு. இங்கு உள்ள  கூம்பு மரங்கள் மிக அடர்த்தியாக  வளர்ந்துள்ளதால் சூரிய ஒளி காடுகளின் உள்ளே புகுவது இல்லை. இதன் நீளம் சுமார் 200 கிலோ மீட்டர்கள் ஆகும் . 

கனோலா மலர் தோட்டம் - சீனா 


கண்ணுக்கு எட்டின தூரம் வரை மஞ்சள் நிற மலர்களுடன் மிளிருகிறது இந்த கனோலா மலர் தோட்டம். இந்த மஞ்சள் நிற பூக்கள் வேற எதுவும் இல்ல , நம்ம கடுகு செடியின் பூ தானாம். இதன் அழகின் காரணாமாக நிறைய ஷூட்டிங் இங்க எடுகப்படுகிரதாம். இதன் சீசன் காலம் பிப்ரவரி முதல் மார்ச் வரையில் தானாம். 

லாவெண்டர் மலர் தோட்டம் - பிரான்ஸ்


லாவெண்டர் மலர் தோட்டத்தினை நிறைய பாடலில் பாத்திருப்போம். இந்த தோட்டம் அழகிற்காக மட்டும் இல்லாம இங்க கிடைக்குற லாவெண்டர் மலர்களைக்கொண்டு பூச்சிக்கடி மற்றும் தீக்காயங்களுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுதுகிரார்களாம்.

காதல் சுரங்கப்பாதை - உக்ரைன்


பெயரை கேட்டதும் எதோ சினிமா படப்பெயர் மாதுரி தோன்றும். ஒரு பழங்கால ரயில் வழித்தடம் முழுவதும் பெரிய பெரிய மரங்கள் சூழ்ந்து ஒரு சுரங்கப்பாதை போன்று தோற்றம் அளிக்கின்றது . பல்வேறு வெளிநாடுகளிலும் இருந்து நிறைய காதல் ஜோடிகள் இங்கே சுற்றிப்பார்க்க வருவதனால இதனை "காதல் சுரங்கப்பாதை" என்றும் அழைக்கின்றனர்.

பொது அறிவு

அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு ? 2007

தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துகளைக் கொண்ட மாவட்டம் ? விழுப்புரம்

உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைக்கும் மலை ? பச்சை மலை

தமிழ்நாட்டில் தலைமைச் செயலகம் ஆரம்பித்த பொது உருவாக்கப்பட்ட முதல் துறை ? பொதுப்பணித்துறை

சென்னை தரமணியில் டைடெல் பார்க் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட வருடம் ? 2000

இலக்கியங்களில் "தன்பொருத்தம் " என வழங்கப்பட்டுள்ள நதி ? தாமிரபரணி

சிறந்த பெண்களுக்கு வழங்கும் தமிழக அரசின் உயரிய விருது ?அவ்வையார் விருது

பாலாறு நதி உருவாகும் மாநிலம் ? கர்நாடகா

உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ? இந்தியா

தமிழ்நாட்டில் எந்த இடத்தில டைனோசர்களின் படிகங்கள் கண்டறியப்பட்டன ? ஜெயம்கொண்டம்

Tuesday, 17 February 2015

தகவல் துளிகள்

தமிழகத்தின் மொத்த மாவட்டங்கள் ? 32

வெப்பமான கிரகம் எது ? வெள்ளி

 உலகில் குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ? ஸ்பெயின்

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரயில் போக்குவரத்து எந்த கணவாய் வழியே நடைபெறுகிறது ? ஆரியன்காவுக்கணவாய்

தமிழகத்தில் தற்போது உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் ? 24

"நெல்லிமண கிராமம்" என்று அழைக்கப்பட்ட இன்றைய நகரம் ?ஜெயம்கொண்டம்

கூவம் நதி உருவாகும் மாவட்டம் ? திருவள்ளூர்

இந்திய சுதந்திரத்தின் பொது தமிழக முதல்வராக இருந்தவர் ? ஓமந்தூர் ராமசாமி

சர்வதேச மகளிர் தினம் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது ? 1921

கோவைக்குற்றாலம் அமைந்துள்ள நதி ? சிறுவாணி

 

Friday, 13 February 2015

வலிப்பு நோய் தாக்கும் பொழுது இரும்பு பொருட்களை ஏன் பயன்படுத்துகிறோம்?

பொதுவாக வலிப்பு நோயின் காரணம் மூலையிலுள்ள நியூரான்களின் செயல்பாடுகள் 
பாதிக்கப்படுவதினால் ஏற்ப்படுகின்றது. வலிப்பு நோய் ஏற்ப்படும் பொழுது நமது உடம்பிலிருந்து மூளைக்கு செல்லும் மின்சாரம் கடத்தப்படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் நபர் சுயநினைவற்ற நிலைக்கு சென்று விடுகிறார்.

வலிப்பனது இயல்பான ஒன்று எனவும், சிறிது நேரத்தில் பாதிக்கப்படும் நபர் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறார் என்றும் ஆங்கில மருத்துவம் கூறுகிறது .

நமது பாரம்பரிய மருத்துவத்தில், வலிப்பு வந்த நபருக்கு கையில்  இரும்புக்கம்பி  தருவதனால் உடம்பிலிருந்து மூளைக்கு செல்லும் மின்சாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதாக நம்பப்படுகிறது.

இன்றைய தகவல் துளிகள்

பூகம்ப ஆய்வு பற்றிய படிப்பு ? சீஸ்மொலோஜி 

எந்த பகுதி உருளைக்கிழங்கின் வடிவம் மாற்றம் ? தண்டு

எந்த தாவர பகுதியாக மஞ்சள் பெறப்படுகிறது ? தண்டு

மருத்துவ உலகின் தந்தை ? ஹிப்போக்ரேட்ஸ்

ஹிப்போக்ரேட்ஸ் எந்த நாட்டினை சேர்ந்தவர் ? கிரேக்கம்

இந்திய மருத்துவத்தின் தந்தை ? சுசிருதர்

முதன் முதலில் கம்பியில்லா தொடர்பு முறையினை நடைமுறையில் கண்டுபிடித்தவர் ? மார்கோனி

எகிப்தின் ராணி கிளியோபாட்ராவை காதலித்து மணந்தவர் ? ஜூலியஸ் சீசெர்

ஹெலிகாப்ட்டர் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? லியோனார்டோ டா வின்சி

ஓவியத்தினை உருவாகிய இத்தாலியன் மேதை ? லியோனார்டோ டா வின்சி

உலகில் அவலட்சணமாக (அழிந்து வரும்) கருதப்படும் சில விலங்குகள்

பலாப் பிஷ்


மீன் இனங்களில் பலாப் பிஷ் எனப்படும் மீன் , மிகப்பெரிய தோற்றம் கொண்ட கடல்வாழ் உயிரினம் . இதன் உடல் தடிமனாக இருப்பதால் கடலின் நிலப்பரப்பில் தங்கி இறையினை பிடித்து உண்ணுமாம்.

ஏ - ஏ


 பெயரை கேட்டதும் யாரோ நம்மள கூப்பிடுற மாதுரி இருக்கா? இதுவும் ஒருவகை அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்று. இது தேவாங்கு இனத்தினை சேர்ந்தது.

சீனாவின் அவலட்சன நாய்


சீனாவில் உள்ள நாய் எல்லி, இதுவே உலகின் அவலட்சன நாயாக தேர்ந்தேடுக்கபட்டுள்ளது. இதனின் முடியற்ற தோற்றமும் , நீண்ட நாக்கும் இதனை அவலட்சனமாக காட்டுகிறது.

வானம் போன்ற கண்களை உடைய தங்க மீன்கள்


இதனின் கண்கள் கருமேகம் சூழ்ந்த வானம் போல் காணப்படுகிறது, இதனின் இரைப்பை இதனின் கண்களை விட சிறியது. இதனின் வால் பகுதி இரண்டாக பிளந்தது போல தோற்றம் கொண்டுள்ளது.

நட்சத்திரம் போன்ற மூக்குகளை உடைய எலி இனம்


இந்த வகை எலி இனத்திற்கு மூக்கு பகுதியில் நட்சத்திரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இந்த மூக்குகள் மிசாரத்தை கூட உணரும் அளவிற்கு உணர்ச்சிமிக்கவைகளாகும்.

மெல்லிய ஓடுகளைக்கொண்ட ஆமை


 இந்த வகை ஆமைகளின் ஓடுகள் மிகவும் மெல்லியதாக காணப்படுகிறது. சுவைமிக்க ஆமை இனம் என்பதால் இதுவும் ஒருவகை அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்று.

ப்ரோபோச்சிக்ஸ் குரங்கு


இந்த வகை குரங்கு இனங்கள் பெரிய மூக்குகளை உடையவை. ஒரு குரங்கு மற்றொரு குரங்கு இனத்தோடு தொடர்புகொள்ள இந்த மூக்கின் வழியே ஒலியினை எழுப்புமாம். ஒலி எழுப்பும் நேரம் அதன் மூக்கு நேராகுமாம்.

இந்திய அரசியல் அமைப்பு பத்தி சில தகவல்கள்

தேர்தல் ஆணையரின் அதிகராம் யாருக்கு சமம் ? உச்சநீதிமன்ற நீதிபதி

அரசியல் என்ற சொல்லை முதல் முதலில் பயன்படுத்தியவர் யார் ? அரிஸ்டாட்டில்

லோக்சபாவில் சபாநாயகர் இல்லை என்றால் சபையை யார் முன்னின்று நடத்துவார் ? துணை சபாநாயகர்

சபாநாயகர் பதவிக்கான தேர்தலை நடத்துபவர் ? இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய அரசியலமைப்பின் "குடியரசு" தன்மை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டதாகும் ? பிரான்ஸ்

எதன் அடிப்படையில் ஒரு நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் ? கடனில் மூழ்கிப்போனவர், பொறுப்பற்றவர் , தகுதியற்றவர்

தமிழ்நாட்டில் அரசு பணியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்த முதலமைச்சர் ? கருணாநிதி

இந்திய துணை குடியரசு தலைவராக உள்ளவர் தலைவராக இருப்பது ? ராஜ்ய சபைக்கு

அடிப்படை உரிமைகள் யாரால் நிறுத்திவைக்கப்படலாம் ? குடியரசு தலைவரால்

இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி ? ஜாகிர் ஹுசேன்

Wednesday, 11 February 2015

வாங்க உலகத்துல இருக்கற சில அழகிய இடங்கள பத்தி பார்க்கலாம்

மாலத்தீவுகள்

இயற்க்கை அன்னையோட அதிசய படைப்பு மாலத்தீவுகள். சின்ன சின்ன இதய வடிவத்துல இருக்கற தீவுகள் இண்டிஅப்பெருங்கடல்ல பார்க்கவே பிரமிப்பூடுறதா இருக்கும். ஆசியாவிலேயே மிக சிறிய நாடு (மக்கள் தொகை , பரபளவு ) இதுதானாம்.


இயற்க்கை கூரை 

வியட்நாம்ல இருக்கற இந்த அழகிய போர்வை போன்ற செடிகள் எல்லாம் என்னனு பார்குறிங்களா? எல்லாம் அரிசி மற்றும் கோதுமை தான் .  

ஹம்பி

இந்தியாவோட கலைநயத்தையும் அழகையும் விளக்குற விதமா இந்த ஹம்பி அமைஞ்சிருக்கு. இத சுற்றியும் வாழைப்பழம், கோதுமைன்னு பயிரிட்டு பார்க்கவே அழகா அமைச்சிருக்காங்க. 


பம்முக்களே

ஆயிரம் ஆண்டு காலமாக  துருக்கியில் பாறைகளின் மேலே படர்ந்துள்ள பனிப்பாறை தான் பம்முக்களே ஆகும்.


பொது அறிவு

உலகின் பணக்கார நாடு ? குவைத்

எந்த பயிர் இந்தியாவின் பெரும்பகுதியில் விளைவிக்கப்படுகிறது ? அரிசி

உலகில் அதிக எண்ணிக்கையில் கிளைகளை உடைய வங்கி ? ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் முன்னாள் பெயர் ? இந்திய இம்பீரியல் வங்கி

தங்கத்தின் மதிப்பு எந்த நாட்டில் நிர்ணயக்கப்படுகிறது ? லண்டன்

கேரளாவில் வளராத பணப்பயிர் ? புகையிலை

வைரம் வெட்டுவதை ஒரு குடிசை தொழிலாக செய்யும் மாநிலம் ? குஜராத்

இந்திய மாநிலங்களில் அதிக வருமானம் ஈட்டுவது ? பஞ்சாப்

இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் அதிக அந்நிய செலாவணி தருவது ? தேயிலை

இந்திய அரசு வருமானத்திற்கு மிக முக்கிய மூலக்கூறு ? வருமான வரி

இந்திய ரூபாயின் புதிய சின்னம் எவற்றின் கலவையாகும் ? தேவநாகரி  "ரா " மற்றும் ரோமன் "ஆர் "

இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படும் தாது ? மெர்குரி

Tuesday, 10 February 2015

இன்றைய தகவல் துளிகள்

லீப் ஆண்டிற்கான திருத்தத்தை கூறியவர் ? போப் கிரிகாரி

கோபி என்ற குளிர் பாலைவனம் எங்கு உள்ளது ? ஆசியா

நறுமணப்பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் ? கேரளா

காப்பி  அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் ? கர்நாடகா

தமிழ்நாட்டில் பெட்ரோல் கிடைக்கும் டெல்டா பகுதி ? காவிரி

இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் ? பஞ்சாப்

பருத்தி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் ? மகாராஷ்டிரா

கனிமங்கள் அதிகம் கிடைக்கும் மாநிலம் ? சோட்டாநாக்பூர்

எந்த வகை மண்ணில் இரும்பு ஆக்சையட் அடங்கி உள்ளது ? செம்மண்

எந்த வகை  மண் ஈரத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல்  பெற்றது? கரிசல் மண்

பொது அறிவு

எஸ்கிமோக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் ? மங்கோலியர்கள்

ஆயிரம் ஏரிகளின் நிலம் என அழைக்கப்படுவது ?  பின்லாந்து 

உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ? ஏஞ்சல் நீர்வீழ்ச்சி

உலகில் அதிக உப்புத்தன்மை உள்ள கடல் ? சிவப்பு கடல்

உலகில் மிக அதிக பரப்பளவில் கரும்பு பயிரிடப்படும் நாடு ? இந்தியா

உலகில் மிகப்பெரிய நாடு ? அமேசான்

தற்போது இந்தியாவின் ஆட்சி மொழி எவ்வளவு ? 22

இந்தியா மொழிவாரியாக பிரிக்கப்பட்ட ஆண்டு ? 1956

தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்து? மணிலா

இந்தியாவில் அதிக பரப்பளவில் ( விகிதத்தில் )  காடுகளைக்கொண்ட இடம் ? அந்தமான்

இன்றைய தகவல் துளிகள்

இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ள தந்தி சேவையை ஈடுகட்ட மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்று முறை எது? இ - போஸ்ட்

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்படும் என ரெசெர்வெ வங்கி அறிவித்துள்ளது ? 2015 இறுதிக்குள்

பெண்களுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட வங்கி ? பாரதீய மகிளா வங்கி (19-11-2013)

"டார்கெட் த்ரீ பில்லியன் (Target 3 Billion) " என்ற நூலை எழுதியவர் யார் ? அப்துல் கலாம்

30 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு கார் கம்பெனி தனது குறிப்பிட்ட ரக காரின் உற்பத்தியை நிறுத்தி விட்டது , அதன் பெயர் என்ன ? மாருதி -800

வென்கோப் என்று விளம்பரப்படுதபடும் பொருள் எதனை குறிக்கின்றது ? சிக்கன்

தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி? சந்தீப் சக்சேனா

இந்தியாவின் தலைமை தேர்தல் அதிகாரி? ஹட்ச்.எஸ்.பிரம்மா

நமக்குள்ள இத்தன விஷயங்கள் இருக்கா !!!

 

மனித உடலில் உள்ள வாய் பகுதியில் தினசரி 1-1.6 லிட்டர் எச்சில் சுரக்கின்றது. 80 வயதுடைய மனிதனின் எச்சில் கொண்டு 2 நீச்சல் குளங்களை நிரப்பி விடமுடியுமாம்.



80% குழந்தைகள் பிறக்கும் போது நீல நிற கண்களுடன் பிறக்கின்றன. குழந்தைகள் கண்களில் "புற ஊதா" கதிர்கள் படும்பொழுது தன்னுடைய உண்மையான நிறம் பெறுகிறது.



நமது விரல் நகங்கள் அடி முதல் நுனி வரை வளர 6 மாதங்கள் (அரை வருடம்) ஆகுமாம்.

ஒவ்வொரு மனித உடலிலும் தனிப்பட்ட வாசம் இருக்குமாம் 
(இரட்டையர்களை தவிர).

 

நமது நாக்கு எச்சிலின் உதவியுடன் உணவை சுவைகின்றது. நமது நாக்கினை நன்றாக உலரவைத்து எதாவது சாப்பிட்டு பாருங்களேன்.

மனிதனின் ஒரு முடியின் சராசரி ஆயுட்காலம் 5 - 7 வருடங்கள்.

வியர்வைக்கு வாசம் கிடையாது , அதனுடன் பாக்டீரியாக்கள் சேரும்பொழுது வியர்வையில் வாசம் உண்டாகிறது.



பிறந்தது முதல் கண்கள் வளருவதில்லை, பிறந்தது முதல் மூக்கு , காது வளர்வதை நிறுத்துவதில்லை.

கை ரேகையை போலவே , மனிதர்களுக்கு தனிப்பட்ட விதமான "நாக்கு ரேகை" காணப்படுமாம்.

மனித விழியின் பார்க்கும் திறன் ஏறக்குறைய 572 பிக்செல்ஸ்.

இறப்பதற்கு முன் நாம் உண்ட உணவு , இருந்தபின் பாக்டீரியா வளர்ந்ததும் நம்மை உண்ணுகிறது.

Friday, 6 February 2015

இன்றைய தகவல் துளிகள்

ஒரு யுகம் என்பது எத்தனை ஆண்டுகள் ? 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்

ஆசியாவின் இத்தாலி என அழைக்கப்படுவது ? இந்தியா தருமபுரி மாவட்டத்தின் சங்ககால பெயர் ? தகடூர்

ஜவ்வரிசி அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம் ? சேலம்

வெங்காயம் அதிகமாக விளையும் மாநிலம் ? மகாராஷ்டிரா

பாகிஸ்தான் நாட்டின் தேசிய மலர் ? மல்லிகைப்பூ

இந்தியாவின் முதல் ஏவுகணையின் பெயர் ? அக்னி

மனித உடலில் எளிதில் உடையாத எலும்பு ? தாடை எலும்பு

குருதேவ் என அழைக்கப்பட்டவர் ? ரவீந்திரநாத் தாகூர்

அப்பளம் தயாரிப்பதில் பிரசித்தி பெற்ற இடம் ? கல்லிடைக்குறிச்சி

தென்னிந்தியாவின் ஏதன்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம் ? மதுரை

தமிழக்கத்தில் தனி நபர் வருமானத்தில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் ? சென்னை

தமிழின் தொன்மையான நூல் ? தொல்காப்பியம்

இந்தியாவில் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் ?சிக்கிம் (0.05%)

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை எந்த இடத்தில உள்ளது? 4 ஆவது இடம்

உலகத்தின் தங்க நகரம் என அழைக்கப்படுவது ? ஜோஹன்ஸ்பெர்க்

இப்படியும் சில விலங்குகளா !!!


"சி அட்டோர்ஸ் (sea otters) " என்னும் விலங்கு தூங்கும் பொழுது தனது துணையுடன் கைகோர்த்துக்கொண்டு உறங்குமாம்.



லட்சக்கணக்கான மரங்கள் அணிலால் நடப்படுகின்றன. பழங்களை, விதைகளை அவசரத்தில் புதைத்துவிட்டு பின் மறந்துவிடுவது அவைகளின் வழக்கம்.

ஆண் மற்றும் பெண் இன நாய்குட்டிகள் ஒன்றாக விளையாடும் போது பெரும்பாலும் ஆண் நாய்குட்டிகள் உடல் அளவில் வலிமையாகினும் பெண் நாய்குட்டிகள் வெற்றிபெற விட்டுகொடுத்துவிடுமாம்.

ஆமைகள் தங்களது ஆசான வாய் வழியாகவும் சுவாசிக்கமுடியுமாம்.

மனிதர்களைப்போலவே பசு இனங்கள் தான் பழகும் மற்றொரு பசுவுடன் நெருங்கி பழகுமாம்.


ஒரு பென்குயின் தனது இணையை தேர்ந்தெடுத்தபின் , தனது இணையின் கூட்டில் சிறிய கூழாங்கல்லை வைத்து தனது காதலை வெளிப்படுதுமாம் (மனிதர்கள் ரோஜா பயன்படுத்துவது போல) . 
 
 சீனாவில் பாண்டா விலங்கினை கொன்றால் மரண தண்டனை விதிக்கபடுகிறதாம் .
டால்பின்கள் செல்லமாக தங்களுக்குள் பெயர் வைத்து அழைத்துக் கொள்ளுமாம்.

அனாதையாக விடப்படும் அணில் குட்டிகளை மற்றொரு அணில் தத்தெடுத்து தனது பிள்ளை போல பராமரிக்குமாம்.

தகவல் துளிகள்

செல்போனை முதன்முதலில் தயாரித்த நிறுவனம் எது? மோட்டோரோலா

நம் நாட்டிற்கு இந்தியா என்ற பெயரை சூட்டியவர்கள் யார்? கிரேக்கர்கள்

வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம் ? கருப்பு

தமிழ்நாட்டு பெர்னான்ட்ஷா எனப்படுபவர் யார்? அண்ணா

தமிழ்நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் ? தொட்டபெட்டா

தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச்சிகரம் ? ஆனைமுடி

"இந்தியாவின் நயாகரா" என அழைக்கப்படும் அருவி ? ஒக்கேனக்கல்

காவிரி நதியின் நீளம் ? 780 கீ.மீ

திருப்பூர் குமரன் பிறந்த ஊர் ? சென்னிமலை

அமைதிப்பள்ளதாக்கு எங்கு அமைந்துள்ளது ? கேரளா

பாண்டவர் பூமி என எந்த மாவட்டம் அழைக்கபடுகின்றது ? தருமபுரி

சும்மாவா சொனாங்க தொப்புள் கொடி உறவுன்னு



பாலூட்டி உயிரினங்கள் எல்லாத்துக்குமே தொப்புள் இருக்கும் . நிறைய பாலூட்டி உயிரினங்களோட உடல் ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இதனால அவைகளோட தொப்புள் எளிதில் பார்க்க முடியாது .

தொப்புளின்  நீட்சியே தொப்புள் கொடி. குழந்தை கருவில் இருக்குறப்ப 9 மாதங்களும் கருவுக்கு உணவு ,சுவாசம் எல்லாம் இந்த தொப்புள் கொடி வழியா தான் நடக்குது .

கருவின் கழிவுகளான கார்பன்-டை-ஆக்ஸைட்  மற்றும் இதர கழிவுகள் தொப்புள் கொடியின் வழியே தாயின் உடலுக்கு வந்து , தாயின் சிறுநீரகம் மற்றும் நுரையீரலின் உதவியுடன் வெளியேறுகிறது.

குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள் கொடி வெட்டி எடுக்கப்படுகிறது. அதுல மிச்ச பகுதி கொஞ்ச நாட்களில் காய்ந்து உதிர்ந்து விடும். நாளிடைவில் தொப்புள் கோடி இருந்த இடம் அதன் அடையாளமான தொப்புளாக மாறிவிடும்.

இந்த தொப்புலானது சிலருக்கு உட்குழிந்த தொப்புலாகவும் , சிலருக்கு வெளிப்புறம் புடைத்த தொப்புலாகவும் காணப்படுகிறது .

தகவல் களஞ்சியம்

இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் மொத்தம் எத்தனை ? 38

கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு ? இங்கிலாந்து

விளையாட்டு துறையில் பயிற்சியாளர்களுக்கு வழங்ககப்படும் விருது ? துரோணாச்சாரியார் விருது

வாட்டஸ் அப் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ? 2009

இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ? கல்கத்தா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? ஏற்காடு

நைல் நதி எந்த கடலில் கலக்கின்றது ? மத்திய தரைன் கடல்

உலகில் உள்ள ஒரே இந்து நாடு ? நேபாள்

உலகில் மிகப்பெரிய முஸ்லிம் நாடு ? இந்தோனேசியா

உலகில் ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ? மலேசியா

தமிழ்நாட்டில் மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டம் ? நாமக்கல்

காவல் துறையில் முதன் முதலில் பெண்களை சேர்த்த நாடு ? பிரிட்டன்

நிலவின் ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம் எவ்வளவு ? 1.5 வினாடி  

பட்டப்படிபிற்க்காக பெண்களை அனுமதித்த முதல் பல்கலைக்கழகம் ? லண்டன்  பல்கலைக்கழகம்

உலகில் அச்சு இயந்திரத்தில் அச்சான முதல் நூல் ? பைபிள்

ரொட்டி நாடு என அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து 

Thursday, 5 February 2015

வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு  கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில்  புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். 

இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே,  வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி ,அதில் தாங்கள் வழிபடும்   தெய்வம் புண்ணியங்களை  சேர்க்கவேண்டும் என வேண்டி பூஜை முடிந்ததும் அதை பருகுகின்றனர், வீடுகளில் தெளிக்கின்றனர்.

 "ப்ர" என்றால்   சமஸ்கிருத  மொழியில் கடவுள். நாம் படைக்கும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது,  "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய  சக்திகள் அணுகாது, மனோபலம் பெருகும் என்பது நம்பிக்கை .

பொது அறிவு

தமிழ்நாட்டில் எத்தனை காவல் நிலையங்கள் உள்ளன ? 1492

தமிழகத்தில், பள்ளிகளில் இலவச மதிய உணவு கொண்டு வரப்பட்ட ஆண்டு ? 1955

இந்திய ரயில்வேயில் எத்தனை ரயில்கள் இயக்கப்படுகின்றன ? 12,500

தமிழகத்தில் உள்ள அணைக்கட்டுகளில் பெரியது ? மேட்டூர் அணைக்கட்டு

உலகின் மிகப்பெரிய நாடு ? ரஷ்யா

யானையின் சராசரி ஆயுட்காலம் ? 47 ஆண்டுகள்

புலியின் சராசரி ஆயுட்காலம் ? 19 ஆண்டுகள்

உலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் இந்தியாவின் விழுக்காடு? 2%