"சி அட்டோர்ஸ் (sea otters) " என்னும் விலங்கு தூங்கும் பொழுது தனது துணையுடன் கைகோர்த்துக்கொண்டு உறங்குமாம்.
லட்சக்கணக்கான மரங்கள் அணிலால் நடப்படுகின்றன. பழங்களை, விதைகளை அவசரத்தில் புதைத்துவிட்டு பின் மறந்துவிடுவது அவைகளின் வழக்கம்.
ஆண் மற்றும் பெண் இன நாய்குட்டிகள் ஒன்றாக விளையாடும் போது பெரும்பாலும் ஆண் நாய்குட்டிகள் உடல் அளவில் வலிமையாகினும் பெண் நாய்குட்டிகள் வெற்றிபெற விட்டுகொடுத்துவிடுமாம்.
ஆமைகள் தங்களது ஆசான வாய் வழியாகவும் சுவாசிக்கமுடியுமாம்.
மனிதர்களைப்போலவே பசு இனங்கள் தான் பழகும் மற்றொரு பசுவுடன் நெருங்கி பழகுமாம்.
ஒரு பென்குயின் தனது இணையை தேர்ந்தெடுத்தபின் , தனது இணையின் கூட்டில் சிறிய கூழாங்கல்லை வைத்து தனது காதலை வெளிப்படுதுமாம் (மனிதர்கள் ரோஜா பயன்படுத்துவது போல) .

சீனாவில் பாண்டா விலங்கினை கொன்றால் மரண தண்டனை விதிக்கபடுகிறதாம் .
டால்பின்கள் செல்லமாக தங்களுக்குள் பெயர் வைத்து அழைத்துக் கொள்ளுமாம்.
அனாதையாக விடப்படும் அணில் குட்டிகளை மற்றொரு அணில் தத்தெடுத்து தனது பிள்ளை போல பராமரிக்குமாம்.
0 komentar:
Post a Comment