Friday, 13 February 2015

உலகில் அவலட்சணமாக (அழிந்து வரும்) கருதப்படும் சில விலங்குகள்

பலாப் பிஷ்


மீன் இனங்களில் பலாப் பிஷ் எனப்படும் மீன் , மிகப்பெரிய தோற்றம் கொண்ட கடல்வாழ் உயிரினம் . இதன் உடல் தடிமனாக இருப்பதால் கடலின் நிலப்பரப்பில் தங்கி இறையினை பிடித்து உண்ணுமாம்.

ஏ - ஏ


 பெயரை கேட்டதும் யாரோ நம்மள கூப்பிடுற மாதுரி இருக்கா? இதுவும் ஒருவகை அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்று. இது தேவாங்கு இனத்தினை சேர்ந்தது.

சீனாவின் அவலட்சன நாய்


சீனாவில் உள்ள நாய் எல்லி, இதுவே உலகின் அவலட்சன நாயாக தேர்ந்தேடுக்கபட்டுள்ளது. இதனின் முடியற்ற தோற்றமும் , நீண்ட நாக்கும் இதனை அவலட்சனமாக காட்டுகிறது.

வானம் போன்ற கண்களை உடைய தங்க மீன்கள்


இதனின் கண்கள் கருமேகம் சூழ்ந்த வானம் போல் காணப்படுகிறது, இதனின் இரைப்பை இதனின் கண்களை விட சிறியது. இதனின் வால் பகுதி இரண்டாக பிளந்தது போல தோற்றம் கொண்டுள்ளது.

நட்சத்திரம் போன்ற மூக்குகளை உடைய எலி இனம்


இந்த வகை எலி இனத்திற்கு மூக்கு பகுதியில் நட்சத்திரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இந்த மூக்குகள் மிசாரத்தை கூட உணரும் அளவிற்கு உணர்ச்சிமிக்கவைகளாகும்.

மெல்லிய ஓடுகளைக்கொண்ட ஆமை


 இந்த வகை ஆமைகளின் ஓடுகள் மிகவும் மெல்லியதாக காணப்படுகிறது. சுவைமிக்க ஆமை இனம் என்பதால் இதுவும் ஒருவகை அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்று.

ப்ரோபோச்சிக்ஸ் குரங்கு


இந்த வகை குரங்கு இனங்கள் பெரிய மூக்குகளை உடையவை. ஒரு குரங்கு மற்றொரு குரங்கு இனத்தோடு தொடர்புகொள்ள இந்த மூக்கின் வழியே ஒலியினை எழுப்புமாம். ஒலி எழுப்பும் நேரம் அதன் மூக்கு நேராகுமாம்.

0 komentar:

Post a Comment