Friday, 20 June 2014

அன்னதானம், விருந்து எதற்காக கடைபிடிக்கப்பட்டது, கடைபிடிக்கப்படுகிறது ?

நீண்ட வரிசையில்  சாப்பாடிற்காக காத்திருக்கும் மக்கள் , சாப்பிட  தட்டு  அல்லது இலை வாங்குவதற்கு அடி-தடி , ஒருவருக்கு அதிகமாய் மற்றவருக்கு சிறிதளவு குறைவாக சாப்பாடு கொடுக்கப்பட்டால் சண்டை .

அன்னதானம் வழங்கும் இடத்தில தவறாமல் நடக்கும் நிகழ்வுகள் இவை .

அன்னதானம் வழங்கப்படுவதன் நோக்கம் உயிரினங்களின் பசியினை ஆற்றுவதற்க்கே. நம் முன்னோர் காலத்தில் பேருந்து வசதிகள் கிடையாது . வெளியூரில் இருந்து கோவில் விசேஷங்கள் , சுபதினங்களுக்கு நடைபயணமாக அல்லது மாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் வருவது வழக்கம் .

அவ்வாறு நடைபயணமாக வரும் மக்கள், அவர் அவர் வீட்டிலேயே "கட்டுச்சோறு" கட்டி எடுத்து வருவர் . வரும் வழிகளில் மர நிழல்களில் அமர்ந்து உடன் வருபவர்களுடன் பகிர்ந்து உண்பர் .

அவர்கள் கொண்டுவரும் கட்டுச்சோறு ஓர்-இரு நாட்களில் கெட்டுவிடும் . நீண்ட தூரம் இவ்வாறு பயணம் மேற்கொள்ளும்போது சில நாட்கள் உணவு இன்றியே கோவிலை வந்தடைவர் .

அவ்வாறு களைப்பில் வரும் பக்தர்களை பசியாற்றவே கோவிலில் அன்னதானம் முறை கொண்டுவரப்பட்டது .

அதேபோல , ஆண்டு முழுவதும்  ஓர்-இரு வேளை  மட்டுமே கூழ், கஞ்சி என அருந்திவிட்டு , நாள் முழுவதும் வயல் காடுகளில் பாடுபடும் மக்கள் ஒருநாளாவது இறைச்சி உன்னச்செய்ய வேண்டும் என்பதே கெடா விருந்து நடத்துவதன் நோக்கம் .

இக்கால மக்கள்,, வீட்டில் தாங்கள் சமைத்த உணவினை நன்றாக உண்டுவிட்டு அன்னதானம் உண்ணுவது , பகட்டிற்காக  விருந்து நடத்துவது போன்ற அவலங்கள், விருந்துகளின் மூலமாக நம் முன்னோர்கள் காட்டிய   மனித நேயத்தை கொன்றுகொண்டு வருகிறது என்பது வருந்தத்தக்க ஒன்றாகும் .

0 komentar:

Post a Comment