"கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி" என்று அடிக்கடி பலர் கூற கேட்டிருப்போம்.
அவ்வாறு கூறுவதன் உண்மை பொருள் தமிழ் மொழி , தமிழ்நாட்டு மக்களின் தொன்மையை குறிப்பதற்கே.
"(கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே,
(வாளோடு) வீரத்தோடு தோன்றிய" முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா
மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்பதன் அர்த்தமாகும்.
பலர் கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக பொருள் கொள்கின்றனர் .
கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில் மனிதன் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. ஆதலால் கல் என்றால் கற்களை , மன் என்றால் மண்ணை குறிப்பதன்று இப்பழமொழி.
0 komentar:
Post a Comment