Tuesday, 24 June 2014

கிராமத்து மூட நம்பிக்கைகள் ...!!!

பெண் உடலின் இயற்கையான நிகழ்வான மாதவிலக்கிற்கு  எத்தனை பெயர்கள். அதை வைத்துத்தான் எத்தனை மூட நம்பிக்கைகள்.

இச்சமயத்தில்  பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும் இப்படி பல தேவையற்ற  பேச்சுக்கள்.

கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். பேய் அடித்துவிடுமாம்! 

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல.

நம் முன்னோர்கள் காரணமின்றி எதுவும் செய்யமாட்டார்கள் . மாதவிலக்கின் போது பெண்களை ஒதுக்கி வைக்க காரணம் அவர்களுக்கு ஓய்வு தர வேண்டும் என்பதற்காகவும் , அவர்கள் பளு தூக்குவதால்  (தண்ணீர் குடம் போன்றவை ) வலி ,மாதவிலக்கு  சுழற்சிகளில் மாறுதல்கள் , அதிக போக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் .

இக்கால நவநாகரிக பெண்கள் தங்கள் உடல் மாற்றங்களில் , தனிப்பட்ட வாழ்வினிலும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் . இதனை முன்னரே அறிந்த நம் முன்னோர் , அக்காலத்திலேயே இதனை நடைமுறை படுத்தி உள்ளனர் .

இன்றும் பல கிராமங்களில் இத்தகைய  மூட வழக்கங்கள் இருந்து வருகின்றது .  இதுபோன்ற மூட நம்பிக்கைகளில் இருந்து தெளிவுற வைக்கவே இத்தகைய பதிப்பு .

0 komentar:

Post a Comment