Thursday, 19 June 2014

அறிவார்ந்த பழமொழிகள் - உண்மை அர்த்தங்கள் ...!!!

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

உண்டி என்பது சாப்பாடு. பெண்கள் உணவு முறையில் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பதன் பொருளாகும் . அதாவது , அளவாக சாப்பிடுதல் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் உணவினை வீண் செய்ய கூடாது என்பதற்காக கூறப்பட்ட பழமொழியாகும் .

சேலை கட்டிய மாதரை நம்பாதே

சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள். 

துணை போனாலும் பிணை போகாதே

ஒருவருக்கு துணையாக அவரை ஊக்குவிக்கலாமே தவிர, அவருக்கு பதிலாக நாம் எதையும் செய்யக் கூடாது. உதாரணத்திற்கு, சிலர் தங்கள் நண்பன் வாங்கிய கடனுக்காக பொறுப்பு கையெழுத்துப் போட்டுவிட்டு நண்பன் அந்த கடனைத் திருப்பி செலுத்தமுடியவில்லையென்றால், தாங்களே அதனை அடைக்கும் சூழ்நிலைக்கு வந்து அல்லல் படுவதைப் பார்த்திருக்கிறோம்.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு

வேலை செய்தால்தான் களைப்பு வரவேண்டும் என்று அவசியமில்லை. நல்ல வயிறு முட்ட சாப்பிட்டால் கூட மயக்கம் மற்றும் களைப்பு வரும். சாப்பாடு விஷயத்தில் தலைவர் சீடர் என்ற பிரிவில்லை. எல்லாருக்கும் உண்ட களைப்பு இருக்கத்தான் செய்யும்.

0 komentar:

Post a Comment