Saturday, 24 May 2014

ஆற்று மணலுக்கு மாற்று மணல்..!!!

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் மணல் இயற்கை மணல் ஆகும். இது எவ்வாறு உருவாகின்றது என்றால் ஒரு இடத்தில் மழை, தட்பவெப்பநிலை, வெப்பம்,  காற்றும்,  நீர் மற்றும் பல இயற்கை காரணிகளின் மூலம் உருவாகின்றது. அவ்வாறு உருவாகும் மணல் எல்லா இடத்திலும் ஒரே அளவிலும் தரத்திலும் இல்லை. இடத்திற்கு இடம் அதன் தன்மைகள் மாறுபடுகின்றன.

இவ்வாறு உருவான மணலை நாம் எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்கும் இயற்கை மறுபடியும் இந்த மணலை உற்பத்தி செய்யும் என்று எண்ணுகிறோம். மணலை எடுப்பதன் மூலம் மணலை உருவாக்கும் இயற்கைக் காரணிகளை சூழ்நிலைகளை நாம் அழித்து விடுகின்றோம். அதனால் நாம் இந்த மணலைப் பாதுகாக்க மாற்று வழிகளை கண்டுபிடித்துச் செயல்படுத்த வேண்டும். நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கும், தலைமுறையும் இந்த இயற்கைச் செல்வத்தை விட்டு வைப்போம்.

இன்று அனைவரும் வீடு கட்டுவதற்கு வாஸ்து (மனை சாஸ்திரம்)  பார்ப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. உண்மையான வாஸ்து என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை அதில் கூறியுள்ளதாவது, வீடு கட்டப் பயன்படுத்தப்படும் பொருள்களில் எலும்புகள் மற்றும் கரிம அசுத்தங்கள் இருக்கக்கூடாது தூய்மையான பொருள்கள் இருக்கவேண்டும் என்று உள்ளது. அதனை பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் யாரும் இயற்கை மணலில் வீடு கட்டமாட்டார்கள்.

நிலத்தில் ஒரு செ.மீ மணல் உருவாவதற்கு 100 ஆண்டுகள் தேவைப்படுகின்றது. அப்படியானால் நாம் இதனை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கவேண்டும். மணலைப் பாதுகாப்பது உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் கடமையாகின்றது. இவ்வாறு உள்ள மணலைப் பாதுகாக்க நாம் புதியதாக உள்ள செயற்கை மணலை மாற்று மணலாக கட்டிடத் தொழில்களில் நாம் பயன்படுத்தலாம்.

செயற்கை மணல் முறையான தொழிற்சாலைகளில் அதன் சரியான இயந்திரங்களை பயன்படுத்தி முறையாகத் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற செயற்கை மணலை, நல்ல மாற்று மணலாக இயற்கை மணலுக்குப் பதிலாக கட்டிடங்கள் கட்டுவதற்கும் மற்ற கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்துவதின் மூலம் இயற்கை மணலை நாம் பாதுகாக்கலாம். இந்தச் செயற்கை மணல் துகள்கள் 150 மைக்ரோன் முதல் 4.75 mm வரை சரியான விகிதத்தில் உள்ளது.

இந்த செயற்கை மணல் சிமெண்ட்டின் பயன்பாடுகளை குறைக்கின்றது மற்றும் அதிக பணச் செலவுகளையும் குறைக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் கட்டிடம் கட்டுதல், கட்டுமான பணிகள் மற்றும் கான்கிரீட் தயாரித்தல் என்பது அதிவேகத்தில் வளர்ந்துள்ளது மற்றும் வளர்கின்றது. இதன் தேவையை இயற்கை மணல் ஈடுசெய்வது என்பது கடினமான ஒன்று. இயற்கை மணல் உருவாவதற்குப் பல கோடி ஆண்டுகள் தேவைப்படுகின்றது. இவ்வாறு உள்ள இயற்கை மணலை நாம் இழந்தால் அதனை ஈடுசெய்வது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் இயற்கை மணல் குறைந்த அளவில் மட்டுமே ஆற்றுப்படுகைகளில் மற்றும் சில இடங்களில் காணப்படுகின்றது. ஆதனால் நாளுக்கு நாள் அதன் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்கின்றது. இந்த இயற்கை மணல் நாம் வாழ்நாளில் நாம் பயன்படுத்தியதை மாதிரியே வரும் தலைமுறையினருக்கும் பயன்படும் என்பது கேள்விக்குறியே.

நமது நாட்டில் இந்த செயற்கை மணலைப் பயன்படுத்துவதற்கு மக்களிடம் பல தவறான எண்ணங்கள் மற்றும் செயற்கை மணலை பற்றிய முறையான தகவல்களை அறியாததனாலும் அவற்றைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடத்தைப் பற்றித் தெளிவான விவரங்கள் இல்லாததனால் அவர்கள் இதனை பயன்படுத்துவது மிக குறைவாக உள்ளது.

இந்த செயற்கை மணல், இயற்கை மணலைவிட தரத்தில் சிறந்தது. இதனை இந்தியாவின் சில பகுதிகளில் வெளிநாட்டினிலும் பயன்படுத்துகின்றனர்கள் உதாரணத்திற்கு இந்தியாவின் புனேயில் மும்பை விரைவு பாதை முற்றிலும் செயற்கை மணலை பயன்படுத்திக் கட்டப்பட்டது.

இயற்கை மணல் அதிகமாக ஆற்றுப்படுக்கைகளில் இருந்து எடுக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது. நிலத்தடிநீர் குறைகின்றது. அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல பகுதிகளில் நிலத்தின் நீர் குறைவின் காரணமாக விவசாயங்கள் பாதிக்கப்படுகின்றது. பிற உயிரினங்களும் பாதிக்கப்பட்டு அழியும் அபாயம் உருவாகின்றது இதனால் வறட்சி அதிகமாகின்றது. மழைப் பொழிவின்  பொழுது நிலத்தடி நீர் தேங்குதல் குறைகின்றது வெப்பநிலை உயர்கின்றது.

செயற்கை மணல் துகள்கள் அதிக வலிமையான கான்கிரீட்டை உருவாக்குகின்றன. இதன் துகள்கள் அனைத்தும் சரியான அளவுகளில் அனைத்துத் துகள்களும் ஒரே சீராக உள்ளது. இதுபோன்று இயற்கை மணலில் துகள்கள் ஒரே சீராக இருப்பதில்லை. எனவே கான்கிரீட் போடப் பயன்படும் பொழுது கண்களுக்கு புலப்படாத சிறு சிறு இடைவெளி உருவாகும். அந்தத் துகள்களும் ஒன்று சேர்வதில்லை இதனால் கான்கிரீட் தரம் குறைகின்றது.

இயற்கையாகக் கிடைத்த வடிகட்டப்பட்ட மணல், இது கட்டிடம் கட்டுதலுக்குத் தரம் குறைவானது என்று ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இதனைப் பயன்படுத்துவதை கர்நாடக மாநில அரசு தடைவிதித்துள்ளது. இந்த மணல் மூலம் உருவாகும் கட்டிடத்தில் விரிசல்கள் உருவாகின்றது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இந்த மணல் ஏரிகள், குளம், குட்டைகளில் அதிகம் எடுக்கப்படுகிறது.  இதில் அதிகமான வண்டல், சேற்றுக் கனிமங்கள்  உள்ளது.

இயற்கையை அழிக்கும் தொழில்நுட்பத்தைப் பெரும் அளவில் நாம் இன்று பயன்படுத்துகின்றோம். ஆனால் இயற்கையைக் காக்கும் இந்தத் தொழில்நுட்பம் சிறிய அளவில் உள்ளது. இதனைப் பெரிதுபடுத்தி இயற்கையை காப்பாற்றிட வழிவகுக்க வேண்டும் நாம்.

பெண்கள் கால் மீது கால் போட்டு உட்கார கூடாதா? ஏன்?

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.

கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் காரணம், பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காருவதனால் கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை.

நாளிடைவில் இது கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.

நீண்ட நேரம் கால் மீது கால் வைத்து உட்காரும் பெண்கள் இனிமேலாவது கவனமாக இருங்கள்...!!!

இரவில் மரத்தடியில் படுக்க கூடாது - ஏன் தெரியுமா??

மனிதன் உயிர் வாழ பிராண வாயு தேவை. அவ்வாறே மரங்களும், செடி, கொடிகளும் உயிர் வாழ பிராண வாயு தேவை.

மனிதன் எப்போதும் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறான். மரங்களோ இரு விதமாக மூச்சு விடுகிறது. பகலில் அசுத்த காற்றை உள் வாங்கி, பிராண வாயுவை வெளிவிடுகிறது. இரவில் பிராண வாயுவை உள் வாங்கி, அசுத்த காற்றை வெளிவிடுகிறது.

எனவே, இரவில் மனிதன் மரத்தின் கீழே படுத்தால், அவனுக்கு போதுமான அளவு பிராண வாயு கிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில் படுக்க கூடாது என்று கூறினார்கள்.

இதனை ஒரு சிலர் மறுத்து பேசினர். அவர்களுடைய உடல் நாலத்திற்க்கும் கேடு வரக் கூடாது என்பதற்காக, இரவில் மரத்தடியில் படுத்தால் பேய் அமுக்கும் என்று பயமுறுத்தி வைத்தனர்.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியின் விளக்கம் தெரியுமா?

அனைவருக்கும் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்ற ஒரு பழமொழி பற்றி தெரியும். ஆனால் இந்த பழமொழி எதற்காக எப்பொழுது முதன் முதலில் சொல்லப்பட்டது இதன் உண்மையான விளக்கம் என்ன என்று தெரியுமா? 

          குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார். அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர். 

       அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். 

     ஆகவே, ஆறிலும் சாவுதா‌ன், அ‌ப்படி இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன். எப்படி செத்தால் என்ன? அத‌ற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்கிறான் கர்ணன்.

       இவ்வாறு கர்ணன் கூறியது தான் இந்த பழமொழிக்கு உண்மையான பொருள். இத்தகைய கர்ணனை தான் கொடைத் தன்மைக்கு மட்டுமல்லாது நல்ல நட்பிற்கும் எடுத்துக்காட்டாக குறிப்பிடுகிறோம்.

Friday, 23 May 2014

துளசி இலையை காதுக்குப் பின்புறம் வைப்பது ஏன்?

காதுக்குப் பின் துளசி வைப்பதனால் பண்டைய மக்கள் பெரும் பயன் அடைந்தனர் . மனித உடலில் உள்ள அசுத்தங்களை உறிஞ்சும் சக்தியை உடையது காதின் பின்புறம் என விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. துளசியின் மருத்துவ குணங்களை நாம் நன்கு அறிவோம். இந்த மருத்துவ குணங்கள் காதுக்குப் பின் உள்ள சருமம் வழியாக ஊடுருவிச் செல்லும். இதனாலேயே பண்டைய மக்கள் துளசி இலையை காதுக்குப் பின் சூடி வந்தனர்.

இதனாலேயே அவர் அவர் வீட்டில் துளசி மாடங்களை அமைத்து இதனை
ஒரு தெய்வீக வழிபாடாகா வைத்தால் மக்கள் பின்பற்றுவார்கள் என நம்
முன்னோர்கள் அமைத்துள்ளனர்.

இன்றைய தலைமுறையினர் பலருக்கு காதில் துளசி வைக்கும் பழக்கம் பற்றி என்னவென்றே தெரிவதில்லை,மாறாக அதனை கேலியும் கிண்டலுமாக பார்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Thursday, 22 May 2014

நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சில பழக்கவழக்கங்கள்...!!!

இன்றைய இளைய சமுதாயத்தினர் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பல நல்ல பழக்கவழக்கங்களை ஏற்றுகொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இது போன்ற பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்ள கூட விரும்புவதில்லை. சரி நம் முன்னோர்கள் கடைப்பிடித்த சில நல்ல பழக்கவழக்கங்களை பார்ப்போம்.
வயிறு பசித்தால்  மட்டுமே உணவினை உண்ண வேண்டும், பிறரின்    கட்டாயத்திற்காக உணவினை உண்ணக்கூடாது.
உணவினை வியாதிக்கு மருந்து உண்ணுவது போல உண்ணவேண்டும்.    ருசிக்காக உண்ணக்கூடாது. அது உடல் நலனை பாதிக்கும். உண்ணும் போது மகிழ்வுடன் உண்ண  வேண்டும்.
குழந்தைகளுக்கு முன் எதையும் அவர்களுக்கு தராமல் உண்ணக்கூடாது.
அதிலும் புகைத்தல், மது அருந்துதல் நிச்சயம் கூடாது.
உணவினை நிந்திக்க கூடாது , உணவினை வீணாக எறிதல் கூடாது . 
அன்னதானம் செய்பவர்களை எந்த காரணம் கொண்டும் இழிவாகப்     பேசக்கூடாது.
உணவு உண்ணும் போது படுத்துக்கொள்ளக் கூடாது, கால்களை      நீட்டிக்கொண்டு உண்ணக்கூடாது. முதியவர்களை தவிர மற்றவர்கள்     தரையில் அமர்ந்துதான் உண்ண  வேண்டும்.

கர்ப்பமாக உள்ள பெண்கள் சூரியன் மறையும் நேரத்தில் உணவு உண்ணக்கூடாது. ஆடையில்லாமல் வெற்று உடலுடன் குளித்தல் கூடாது. மாலை நேரத்தில் உறங்குதல் கூடாது.
கர்ப்பமான பெண்கள் மன அமைதித்தரும் பாடல்கள் மற்றும் அன்பு
பாசம்,தைரியம் வளர்க்கும் கதைகள் கேட்பது,படிப்பது  போன்றவற்றில்
இடுபாடுக்காட்டவேண்டும்.
எந்த மதத்துடைய புராண,இதிகாசங்களையும் பழித்தலோ அல்லது கேலி செய்தலோ நிச்சயம் கூடாது.

தாய்,தந்தை, குரு  மற்றும் வயது முதிர்ந்த பெரியவர்களின்  சாபத்திற்கு
ஆளாகக்கூடாது.

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் - உஷார்...!!!

இன்றைய பெரும்பாலான கல்லூரி மாணவர்கள், தினசரி வேலைக்கு
செல்பவர்களுடன் ஒன்றிவிட்டது பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ்.

பார்க்க அழகாகவும், நிறைய வண்ணங்களில் கிடைப்பதாலும், மக்கள்
விரும்பி வாங்குகின்றனர்.
நாகரிக முன்னேற்றம் என உண்ணும் உணவில் கூட நஞ்சை விதைகின்றனர் நம் மக்கள்.

சூடான உணவினை இதுபோன்ற டிபன்களில் அடைப்பதனால் சுவையின்
குணமே மாறிவிடுகிறது.

மைக்ரோவேவ் ஒவனில் உணவுகளை சமைப்பதோ, அடிக்கடி பிளாஸ்டிக் கண்டெய்னர்களின் மூலம் உணவுகளை சூடு செய்வதோ, உணவுகளை உண்பதோபெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் சிக்கல் எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

"ஃபூட் கிரேடு" என்று பிளாஸ்டிக் வகைகள் இருந்தாலும் அதிலும் உணவுக்கேடு உருவாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

எனவே ஆரோக்கியமான உணவும், ஆரோக்கியமான சமையல் முறையுமே ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்களுக்கு முக்கிய பங்குண்டு.
ஹார்மோன்களின் சுரப்பு சமமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவைகளின் சுரப்பு, குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள். 

சத்தான சரிவிகித உணவு உட்கொண்டால் மட்டுமே ஹார்மோன்களின் சுரப்பை கட்டுக்குள் வைக்கமுடியும். ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களுக்கு அவசியமானது.

Wednesday, 21 May 2014

வாங்க தெரிஞ்சுக்கலாம் ...!!!


  • மலைப்பாம்பு தன் உணவில் இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்துவிடும்.
  • 200 கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள். நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.
  • "ராக்கூன்" என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.
  • ஆந்தையால் ஓரே நேரத்தில் இரு கண்களாலும் இரு வேறு காட்சிகளைக் காண முடியும். 
  • பெண் சிலந்திப் பூச்சிகள், ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன. 
  • மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.  
  • பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.

இயற்கை அதிசயங்கள்...!!!



  • உலகில் குறைந்தது ஒரு கோடி பேராவது உங்கள் பிறந்தநாளன்று தங்கள் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள்.
  • ஒவ்வொரு முறை தும்மும் போதும் நமது மூளையில் சில அணுக்கள் இறக்கின்றன.
  • ஹவாய் தீவு வருடத்திற்கு 10 சென்டிமீட்டர் ஜப்பானை நோக்கி நகர்கின்றது.
  • பார்த்ததை 5 நிமடங்களுக்குள் மறப்பவை தங்க மீன்கள்.
  • ஒருவர் சந்தோஷமாக அழும் பொழுது முதலில் வலது கண்ணிலும், வலியால் அழும் பொழுது இடது கண்ணிலும் கண்ணீர் வரும்.
  • மின்மினிப் பூச்சி வண்டு இனத்தைச் சேர்ந்தது.பெண் மின்மினிப் பூச்சிகளே அதிக ஒளி தரும்.  
  • நம் கண்களில் "லாக்ரிமல் கிளாண்ட்" என்ற சுரப்பியால் சுரக்கப்படும்
    லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.
     

நின்றுகொண்டு நம்மை நாமே சுற்றினால் தலை கிறுகிறுப்பது ஏன்?

சிலர் ஓரே இடத்தில நின்றுகொண்டு தன்னை தானே சுற்றும் போதோ அல்லது தூரி, ராட்டினம் போன்றவற்றுள் சுற்றும் போதோ தலை கிறுகிறுத்து போய்விடுவர்.

இதற்கு காரணம், என்ன தெரியுமா?

நம்மளோட மூளை, காது பகுதிகளில் அதிர்வினை தாங்குரதுகாக ஒரு
மெல்லிய சவ்வு போன்ற படலம் இருக்குமாம். இது காதிற்கு, மூளைக்கு
அதிக அளவு அதிர்வினை தாங்குற சத்திய தருமாம்.

நம்ம தூரி இல்ல ராட்டினதுல சுத்தும்போது இந்த படலம் ஒரு சமனிலைல இல்லாம இருக்குமாம்.

அதுனால தான் நமக்கு தல சுத்துற மாதுரி இருக்குமாம்.
அந்த படலத்துல இருக்கற நீர் சமநிலைக்கு வந்ததுகப்பரம் தல சுத்துறது
நின்றிடுமாம்.

Tuesday, 20 May 2014

திருமணங்களில் ஏன் அட்சதையாக அரிசி தூவுகிறார்கள்?














மங்கல நிகழ்வுகளில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு காணப்படுகின்றது.
அட்சதை என்றால் உடைக்கப்படாத, பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சள் பொடி, மலர்கள் சேர்த்த கலவை ஆகும். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை "அறுகரிசி" எனவும் அழைக்கின்றனர்.
கன்னிகா தானம், தாலிகட்டுதல், ஆசீர்வாதம் ஆகிய முக்கிய நிகழ்வுகளின் போது அட்சதை இட்டு வாழ்த்தும் வழக்கம் நம்மவர்களிடையே உள்ளது. எனினும், ஆசீர்வாதத்தின் போதே பலரும் அட்சதை தூவி வாழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு.
அறுகு வம்ச விருத்தியின் குறியீடு. ஆனால், தற்காலத்தில் அழகுக்கு முதன்மை வழங்க வேண்டும் என்பதற்காக வெள்ளை அரிசிக்கு மஞ்சள் நிறச்சாயம் பூசி அட்சதையாக பயன்படுத்துகின்றனர்.
அட்சதை என்பது ஒரு மங்கலப்பொருள்.அது எவர் கையிலிருந்து அளிக்கப்படுகிறதோ அதைபொருத்து அதன் சக்தி இருக்கும்.
பெற்றோர்கள், பெரியவர்கள், தூய்மையான எண்ணம் உடையவர்கள் கையிலிருந்து ஆசீர்வாதம் செய்து தூவப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தது.
அவைகள் நல்ல பலன்களை தவறாது அளிக்கும்.

தென்னைமட்டை தலையில் விழுந்தால் ஆயுள் குறையுமா?

தென்னை மரங்கள் உயரமாக இருக்கறதுனால அதுல இருக்குற தென்னை மட்டை, தேங்காய் போன்றவை தென்னை மரம் அடியில் நடக்கும் பொது
தலையில் விழ நேரிடும்.

இப்படி தென்னைமட்டை தலையில் விழுறது கேட்ட சகுனம்னு பொதுவான ஒரு கருத்து இருக்கு.

அது அவர் அவர் விருபத்த பொருத்தது, இருந்தாலும் அறிவியல் உண்மை என்னனா தென்னை மட்டை, தேங்காய் எல்லாம் நம்ம தலையில விழும்போது தலையில் "உள்காயம்,நரம்பு பாதிப்பு,மண்டை பாதிப்பு, மூளை பாதிப்பு" ஏற்படும்.

இதுனால உடல் கொஞ்சம் கொஞ்சமா நோய்வாய்ப்படும்.

சிலருக்கு ஒண்ணுமே ஆகாது. அது காயத்த பொருத்து மாறும்.

எப்படியோ தென்னைமரம் அடியில நடகுறப்ப கொஞ்சம் ஜாகரதையா
இருங்க நண்பர்களே.

Monday, 19 May 2014

பால் காய்ச்சும்போது ஏன் பொங்கி வருகிறது? தண்ணீர் காய்ச்சும்போது ஏன் பொங்கி வருவதில்லை?

பாலில் தண்ணீர், புரதம், மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப்பொருட்கள் அடங்கி உள்ளன. 

பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் பாலின் மேற்பரப்பில் அவை மிதக்கின்றன.

தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 டிகிரி செல்சியஸ். பாலில் 
உள்ள கொழுப்பு 50 டிகிரி செல்சியஸ்ல் உருக ஆரம்பித்து விடுகிறது. 
பாலை காய்ச்சும்போது 50 டிகிரி செல்சியஸ் நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது.

எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப்படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு மேலெழும்பி பொங்கிவழிகிறது. 

பால் காய்ச்சும்போது தொடர்ந்து துழாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழி வதில்லை ஏன்?

பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துழாவிக் கொண்டேயிருந்தால் மேற்பரப்பில் ஏடு படிவது தடுக்கப் படுகிறது. தோன்றும் காற்றுக் குமிழ்கள் வெளியேறிவிடும். எனவே பால் பொங்கி வழிவது தடுக்கப்படு கிறது.

தண்ணீர் காய்ச்சும்போது  ஏன்  பொங்கி வருவதில்லை?

தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ கிடையாது. எனவே மேற்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.


கேஸ் சிலிண்டரில் வெளியே வரும் கேஸ் மட்டும் எப்படி எரிகிறது? உள்ளே உள்ள வாயு ஏன் எரிவதில்லை?

எந்த ஒரு எரிபொருளும் எரிவதற்கு, அது எரிவதற்கான வெப்பநிலை, பிராணவாயு ஆக்சிஜன் மிகவும் அவசியம்  ஆகும்.

கேஸ் சிலிண்டெரில் என்-பியூட்டேன் என்ற எரிபொருள் உள்ளது.

சமையல் வாயு பற்றிக் கொள்ளும் வெப்பநிலை 360 டிகிரி செல்சியஸ் ஆகும்.

சிலிண்டரின் உள்ளே அதிக அடர்த்தியில் அடைத்துவைக்கபட்டுள்ள கேஸ், சிலிண்டர் வால்வைத் திறந்ததும், சிலிண்டரைவிட்டு வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்து அடைகிறது.

ஒரு தீக்குச்சியால் அல்லது லைட்டரால் பற்ற வைக்கும்போது சமையல் வாயு 360  டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அடைந்து பற்றிக் கொள்கிறது , அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரிகிறது.

சிலிண்டரின் உள்ளே உள்ள எரிபொருள் எரிவதற்கான ஆக்சிஜன் சிலிண்டரின் உள்ளே செல்ல வேண்டும்.

இது முற்றிலும் சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஏன் என்றால் சிலிண்டரின் உள்ளே மிக மிக அதிக அடர்த்தியில் எரிபொருள் அடைக்கபட்டுள்ளது.

அதை தாண்டி ஆக்சிஜன் உள்ளே செல்வது சாத்தியம் இல்லாத ஒன்று.

பொதுவாக, காற்றானது அடர்த்தி அதிகம் உள்ள இடத்திலிருந்து அடர்த்தி
குறைவான இடத்திற்கு செல்கிறது.

இயற்கை, அறிவியல் ஆச்சரியங்கள் ... நம்பினால் நம்புங்கள் !!!


  • தொடர்ச்சியாக இயர் போன் அணிபவர்களின் காதில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும். 
  • ஒரு இயர் போனை பலர் பயன்படுத்துகையில் ஒவ்வாமை ஏற்படவும் கூடும்.
  • நத்தையின் மூளை நம்முடையதைப் போலவே நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது.
  • உலகில் உள்ள 5 நீரிழிவு நோயாளிகளில் ஒருவர் இந்தியர் .
  • ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள்தான் கடிக்கும்.  
  • சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும்.
  • திராட்சையை மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தினால், வெடித்து விடும்
  •  கிசுகிசு பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நம் மூளையில் கிசுகிசுக்களுக்கென தனிப்பகுதியே உண்டு என்கிறது அறிவியல் .
  • ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
  • குரங்கிற்கு இரண்டு மூளைகள் உண்டு , ஒன்று அதன் உடல் பகுதியை கட்டுபடுத்தும் , மற்றொண்டு அதன் வால் பகுதியை கட்டுபடுத்துகிறது . 
  • சாதாரணமாக ஒரு மனிதன் ஓர் ஆண்டில் 5 கிலோ உப்பை உட்கொள்கிறான்.
  • அறிஞர்கள் சாக்ரட்டீஸும் ஹோமரும் எழுத படிக்க தெரியாதவர்கள்.
  • ஜப்பான் நாட்டு மயில்கள் சிவப்பு நிறத்தில் முட்டையிடும்.
  • பெரும்பாலான மீன்களுக்கு தங்கள் உடல் முழுவதும் சுவை மொட்டுகள் இருக்கும்.
  • மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.   

வீட்டு வேலை செய்யுங்கப்பா....உடல் ஆரோக்கியமா இருக்குமாம்!

இன்றைய காலத்தில் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை சுத்தம் செய்ய கடைகளில் விற்கும் வாஷிங் மிசின், கிரைண்டர், வேக்கியூம் கிளீனர் போன்ற பொருட்களை வாங்கி சுத்தம் செய்கின்றனர். அவ்வாறு வீட்டை சுத்தம் செய்ய சோம்பேறித்தனப்பட்டால், உடல் வளையாமல் இருந்து, அதனால் ஆரோக்கியத்திற்கு தடை ஏற்படும். ஏனெனில் வீட்டை சுத்தம் செய்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அது எப்படியென்று பார்ப்போமா?

குனிந்து நிமிர்ந்து வீட்டை சுத்தம் செய்வதால், உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் கரையும். அதுவும் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து அமையுமாம் .
 
மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் வீட்டை சுத்தம் செய்வதால் சரியாகும். எப்படியென்றால், வீட்டை சுத்தம் செய்யும் போது மனம் அந்த வேலையில் கவனத்தை செலுத்துவதால், மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் கஷ்டங்கள் பறந்துவிடும். 
 
 உடற்பயிற்சியிலேயே சிறந்த பயிற்சி என்றால் அது வீட்டை சுத்தம் செய்வது தான். இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்படுவதோடு, கை கால்கள் நன்கு வளைந்து, தசைகள் நன்கு வலுவாகின்றன. அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டு வேலையை செய்தால், எலும்புகள் வலுபெற்று பிரசவத்தின் போது, எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். 
 
துணியை துவைக்க வாஷிங் மிசினை பயன்படுத்தாமல், கைகளினாலேயே துவைத்தால், கைகள் வலுபெறுவதுடன், இடுப்பு எலும்புகளும் நன்கு வலுவோடு இருக்கும். 
 
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் போது, சிறிது நேரம் வீட்டு வேலையை செய்தால் கவனச்சிதறல்கள் நீங்கும். சுத்தம் செய்யும் போது வேறு எந்த நினைப்பும் இருக்காது, சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். 

அதுனால ,  டைம் இருக்கறப்ப வீட்ட சுத்தம் செயுங்க , மனசும் சுத்தம் ஆகும் .

குங்குமம் எப்படி தயாரிக்கபடுகிறது

குங்குமம், நமது பாரம்பரியமான, பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும்  விதமாகவும் , மங்கள சின்னமாகவும் கருதப்படுகிறது .

இத்தகைய சிறப்புமிக்க குங்குமத்த எப்படி தயாரிகுறாங்க தெரியுமா?

இத வீட்டில நம்மலே செஞ்சு பாக்கலாம் .

கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் எலுமிச்சை சாறு இரண்டும் எடுத்துக்கணும். மஞ்சள் பொடியில கொஞ்சம்  எலுமிச்சை சாற்றை விடனும், எலுமிச்சை சாறு பட்டதுமே மஞ்சள் தூள் சிவப்பு நிறமா மாற ஆரம்பிக்கும். தேவையான அளவு சிவப்பு வரவரைக்கும் எலுமிச்சை சாறு சேர்த்துக்கலாம்.

நல்லா பேஸ்ட் செஞ்சு காய விடணும். நல்லா காஞ்சதுக்கப்பறம் பவுடர் பண்ணினா குங்குமம் ரெடி !


Sunday, 18 May 2014

நள்ளிரவில் நாய் ஊளையிட்டால் கெட்டசகுனமா - அறிவியல் என்ன சொல்கிறது?

நள்ளிரவில் நாய் ஊளையிடுறது இயல்பான ஒன்று.

பொதுவா நாய்கள் மனிதனிடம் பாசமா இருக்கற விலங்கு. இரவில் நாம எல்லாரும் தூங்கிய பிறகு நாய்கள் தனியா இருக்கற மாதுரி பீல் பண்ணுமாம்.

அதுனால நம்மளோட கவனத்த ஈர்கரதுக்கு கத்தும், அழுகுமம். நாய்கள்
அப்படி அழுகறப்ப நம்ம பொய் கொஞ்சநேரம் அதுங்க கூட பேச்சு குடுதோம்னா அமைதி ஆகிரும்.

நாய்கள் ஊளையிட்டா மரணம் வரும்னு பொதுவான ஒரு மூடநம்பிக்கை
இருக்கு.

டெக்னாலஜி இவ்ளோ வளந்துட காலத்துல இன்னும் இதெலாம் நம்பிட்டு,
விழிப்புணர்வு இல்லாம இருக்கறது "ரொம்ப கஷ்டம்" தான்.

13 ஆம் எண்,8 ஆம் எண் கெட்ட சகுனமா?



மூடநம்பிக்கைகள் பலவிதம் உண்டு; அதில் ஒன்று இவ்வகை எண் மூடநம்பிக்கை, தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் மூடநம்பிக்கை நிறைந்து இருக்கும்.

சிலர் தன்பெயரில் கூட ஓர் எழுத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ மாற்றியமைப்பதுண்டு.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று அவர்கள் நம்புவது உண்மையானால், இந்த 13ஆம் எண்ணைப் படைத்தவரும் கடவுள் தானே?.

இன்னும் சில பேருக்கு எட்டாம் எண்ணும் பிடிக்காது;

ஏன் வாகனப் பதிவில் பெருவாரியாக இது பின்பற்ற படுகிறது. கூட்டினால் 9 வருகின்ற எண்ணை வாங்க தனிக்கட்டணம்.

எந்த எண்ணாக இருந்தாலும் சரியாக ஓட்டவில்லை என்றால் விபத்து தானே நடக்கும், உயிரிழப்பு வரும்.

விஞ்ஞான மனப்பான்மையை மக்கள் மத்தியில் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது (51A).

நாட்டு மக்களுக்கு உணவைவிட உண்மையில் முக்கிய மாகத் தேவைப்படுவது பகுத்தறிவே. அது சரியாக இருந்தால்தான் மற்றவைகளும் சரியாக இருக்கும்.






இந்தியாவின் பிரதமர்கள் இதுவரை

இந்தியாவின் பிரதமர்கள் இதுவரை-நம் முன்னோர்கள்
பிரதமர் பெயர்
பதவி காலம்
திரு. ஜவஹர்லால் நேரு
15.1.1947 முதல் 27.5.1964 வரை

திரு. குல்சாரிலால் நந்தா (தற்காலிகம்)
27.05.1964 முதல் 09.06.1964 வரை

திரு. லால் பகதூர் சாஸ்திரி
09.06.1964 முதல் 11.01.1966 வரை

திரு. குல்சாரிலால் நந்தா (தற்காலிகம்)
11.01.1966 முதல் 24.01.1966 வரை


திருமதி. இந்திரா காந்தி
24.01.1966 முதல் 24.03.77 வரை
திரு. மொரார்ஜி தேசாய்
24.03.1977 முதல் 15.07.1979 வரை

திரு. சரண் சிங்
28.07.1979 முதல் 14.01.1980 வரை

திருமதி. இந்திரா காந்தி
14.01.1980 முதல் 31.10.1984 வரை

திரு. ராஜீவ் காந்தி
31.10.1984 முதல் 02.12.1989 வரை

திரு. வி. பி. சிங்
02.12.1989 முதல் 10.11.1990 வரை

திரு. சந்திரசேகர்
10.11.1990 முதல் 21.06.1991 வரை

திரு. பி. வி. நரசிம்ம ராவ்
21.06.1991 முதல் 16.05.1996 வரை
திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்
16.05.1996 முதல் 01.06.1996 வரை

திரு. தேவகவுடா
01.06.1996 முதல் 21.04.1997 வரை
திரு. ஐ. கே. குஜரால்
21.04.1997 முதல் 19.03.1998 வரை

திரு. அடல் பிஹாரி வாஜ்பாய்
19.03.1998 முதல் 22.05.2004 வரை
திரு. மன்மோகன் சிங்
22.05.2004 முதல் 21.05.2009 வரை
திரு. மன்மோகன் சிங்
22.05.2009 முதல் 20.05.2014 வரை
திரு. நரேந்திர மோதி
21.05.2014 முதல்

Saturday, 17 May 2014

கோவில்கள் ஏன் மலைகளில் அதிகம் அமைதுள்ளன?

மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. 

இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. 

தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. 

இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

.

அரச மரத்தை சுற்றினால் குழந்தை பிறக்குமா?

அரச மரத்த சுத்துறது சில பேர் தெய்வ வழிபாடுகாக நினைக்குறாங்க , சில பேர் அப்படியாவது குழந்த பிறக்காதானு நினச்சு செய்வாங்க.

இதெலாம் அவங்க விருபத்த பொருத்தது. உண்மையான காரணம் அரச மரம் "அம்மோனியா " வேதி பொருள் நெறைய வெளியிடும்.

இது பெண்களின் கர்ப்பபைக்கு ரொம்ப உகந்த பலத்த தரும் . ரொம்ப நேரம் அரச மரத்த சுத்தும் பொது நல்ல பலன் கிடைக்கும்.

இதான் உண்மையான அறிவியல் காரணம்.

இடி இடிக்கும் போது அர்ஜுனா அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

மழை பெய்யும் போது இடி இடித்தால் அர்ஜுனா அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டுஇருபங்க பெரியவங்க .

உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?
இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும்.

இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது.

"அர்" என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும்.
ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும்.

"னா" என்னும்
சொல்லும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும்.

இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.

அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள்.

அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது.

காளை சிவப்பு நிறத்தைப் பார்த்தல் கோபம் கொள்ளும் என்பது உண்மையா?

பொதுவாக கால்நடைகளுக்கு சிவப்பு ,நீலம் ,கருப்பு என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.

ஏன் என்றால் அவைகளுக்கு நிறக்குருடு  என்னும் குறைபாடு உள்ளது.அதனால் தான் அவற்றிற்க்கு எல்லா நிறமும் ஒரே மாதிரித்தான் தெரிகின்றது .

ஸ்பெயினில் நடை பெரும் புள் பைட் (BULL FIGHT) எனப்படும் காளை  விளையாட்டில் சிவப்புத்துணியை காட்டித்தான் வெறி ஏற்றுவர்.

ஆனால்  இந்த சிவப்பு நிறத்தைப் பார்த்து ஆத்திரப் பட்டு காளை பாய்வது இல்லை.

அத்துணியின் வேகமான அசைவுதான் அதை ஆத்திரப்பட்டு பாயச் செய்கின்றது.

அது போலதான் மனிதர்கள் சிவப்பு நிற ஆடையை அணிந்து போகும் போது காளையை பார்த்து நம்மைத் துரத்துமோ என்று ஓடும் அந்த சலனம் தான் அது  மனிதர்களை விரட்டக் காரணம் ஆகின்றது.