அரைஞாண் கயிறு நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் இடுப்பில் கட்டிவிடும் ஒரு வகை கயிறாகும். இதன் பயன்கள் பலவிதம் உள்ளன, அவற்றில் சிலவற்றை காண்போம்.
அரைஞாண் என்பது கிராமத்தில் வாழும் மக்களுக்கு அவசர கால உதவி.கழனியிலும் காடுகளிலும் விஷம் கொண்ட பூச்சிகள், பாம்புகள் எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது. விஷத்தின் கடிவாய்க்கும் இதயத்துக்கும் இடையே தடைபோடும் உத்திக்கு அரைஞாண் கயிறு உற்ற தோழன்.
கையினால், விஷம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக் கொடியாக மாறியது.
இன்றைக்கு அரைஞாண்கயிறு கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

0 komentar:
Post a Comment