Saturday, 24 May 2014

ஆற்று மணலுக்கு மாற்று மணல்..!!!

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் மணல் இயற்கை மணல் ஆகும். இது எவ்வாறு உருவாகின்றது என்றால் ஒரு இடத்தில் மழை, தட்பவெப்பநிலை, வெப்பம்,  காற்றும்,  நீர் மற்றும் பல இயற்கை காரணிகளின் மூலம் உருவாகின்றது. அவ்வாறு உருவாகும் மணல் எல்லா இடத்திலும் ஒரே அளவிலும் தரத்திலும் இல்லை. இடத்திற்கு இடம் அதன் தன்மைகள் மாறுபடுகின்றன.

இவ்வாறு உருவான மணலை நாம் எடுக்க எடுக்கக் குறையாமல் இருக்கும் இயற்கை மறுபடியும் இந்த மணலை உற்பத்தி செய்யும் என்று எண்ணுகிறோம். மணலை எடுப்பதன் மூலம் மணலை உருவாக்கும் இயற்கைக் காரணிகளை சூழ்நிலைகளை நாம் அழித்து விடுகின்றோம். அதனால் நாம் இந்த மணலைப் பாதுகாக்க மாற்று வழிகளை கண்டுபிடித்துச் செயல்படுத்த வேண்டும். நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கும், தலைமுறையும் இந்த இயற்கைச் செல்வத்தை விட்டு வைப்போம்.

இன்று அனைவரும் வீடு கட்டுவதற்கு வாஸ்து (மனை சாஸ்திரம்)  பார்ப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. உண்மையான வாஸ்து என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை அதில் கூறியுள்ளதாவது, வீடு கட்டப் பயன்படுத்தப்படும் பொருள்களில் எலும்புகள் மற்றும் கரிம அசுத்தங்கள் இருக்கக்கூடாது தூய்மையான பொருள்கள் இருக்கவேண்டும் என்று உள்ளது. அதனை பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் யாரும் இயற்கை மணலில் வீடு கட்டமாட்டார்கள்.

நிலத்தில் ஒரு செ.மீ மணல் உருவாவதற்கு 100 ஆண்டுகள் தேவைப்படுகின்றது. அப்படியானால் நாம் இதனை எவ்வாறு போற்றிப் பாதுகாக்கவேண்டும். மணலைப் பாதுகாப்பது உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் கடமையாகின்றது. இவ்வாறு உள்ள மணலைப் பாதுகாக்க நாம் புதியதாக உள்ள செயற்கை மணலை மாற்று மணலாக கட்டிடத் தொழில்களில் நாம் பயன்படுத்தலாம்.

செயற்கை மணல் முறையான தொழிற்சாலைகளில் அதன் சரியான இயந்திரங்களை பயன்படுத்தி முறையாகத் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படுகின்ற செயற்கை மணலை, நல்ல மாற்று மணலாக இயற்கை மணலுக்குப் பதிலாக கட்டிடங்கள் கட்டுவதற்கும் மற்ற கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்துவதின் மூலம் இயற்கை மணலை நாம் பாதுகாக்கலாம். இந்தச் செயற்கை மணல் துகள்கள் 150 மைக்ரோன் முதல் 4.75 mm வரை சரியான விகிதத்தில் உள்ளது.

இந்த செயற்கை மணல் சிமெண்ட்டின் பயன்பாடுகளை குறைக்கின்றது மற்றும் அதிக பணச் செலவுகளையும் குறைக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் கட்டிடம் கட்டுதல், கட்டுமான பணிகள் மற்றும் கான்கிரீட் தயாரித்தல் என்பது அதிவேகத்தில் வளர்ந்துள்ளது மற்றும் வளர்கின்றது. இதன் தேவையை இயற்கை மணல் ஈடுசெய்வது என்பது கடினமான ஒன்று. இயற்கை மணல் உருவாவதற்குப் பல கோடி ஆண்டுகள் தேவைப்படுகின்றது. இவ்வாறு உள்ள இயற்கை மணலை நாம் இழந்தால் அதனை ஈடுசெய்வது மிகவும் கடினமான ஒன்று. ஏனெனில் இயற்கை மணல் குறைந்த அளவில் மட்டுமே ஆற்றுப்படுகைகளில் மற்றும் சில இடங்களில் காணப்படுகின்றது. ஆதனால் நாளுக்கு நாள் அதன் விலையும் விண்ணை தொடும் அளவிற்கு உயர்கின்றது. இந்த இயற்கை மணல் நாம் வாழ்நாளில் நாம் பயன்படுத்தியதை மாதிரியே வரும் தலைமுறையினருக்கும் பயன்படும் என்பது கேள்விக்குறியே.

நமது நாட்டில் இந்த செயற்கை மணலைப் பயன்படுத்துவதற்கு மக்களிடம் பல தவறான எண்ணங்கள் மற்றும் செயற்கை மணலை பற்றிய முறையான தகவல்களை அறியாததனாலும் அவற்றைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடத்தைப் பற்றித் தெளிவான விவரங்கள் இல்லாததனால் அவர்கள் இதனை பயன்படுத்துவது மிக குறைவாக உள்ளது.

இந்த செயற்கை மணல், இயற்கை மணலைவிட தரத்தில் சிறந்தது. இதனை இந்தியாவின் சில பகுதிகளில் வெளிநாட்டினிலும் பயன்படுத்துகின்றனர்கள் உதாரணத்திற்கு இந்தியாவின் புனேயில் மும்பை விரைவு பாதை முற்றிலும் செயற்கை மணலை பயன்படுத்திக் கட்டப்பட்டது.

இயற்கை மணல் அதிகமாக ஆற்றுப்படுக்கைகளில் இருந்து எடுக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது. நிலத்தடிநீர் குறைகின்றது. அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல பகுதிகளில் நிலத்தின் நீர் குறைவின் காரணமாக விவசாயங்கள் பாதிக்கப்படுகின்றது. பிற உயிரினங்களும் பாதிக்கப்பட்டு அழியும் அபாயம் உருவாகின்றது இதனால் வறட்சி அதிகமாகின்றது. மழைப் பொழிவின்  பொழுது நிலத்தடி நீர் தேங்குதல் குறைகின்றது வெப்பநிலை உயர்கின்றது.

செயற்கை மணல் துகள்கள் அதிக வலிமையான கான்கிரீட்டை உருவாக்குகின்றன. இதன் துகள்கள் அனைத்தும் சரியான அளவுகளில் அனைத்துத் துகள்களும் ஒரே சீராக உள்ளது. இதுபோன்று இயற்கை மணலில் துகள்கள் ஒரே சீராக இருப்பதில்லை. எனவே கான்கிரீட் போடப் பயன்படும் பொழுது கண்களுக்கு புலப்படாத சிறு சிறு இடைவெளி உருவாகும். அந்தத் துகள்களும் ஒன்று சேர்வதில்லை இதனால் கான்கிரீட் தரம் குறைகின்றது.

இயற்கையாகக் கிடைத்த வடிகட்டப்பட்ட மணல், இது கட்டிடம் கட்டுதலுக்குத் தரம் குறைவானது என்று ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இதனைப் பயன்படுத்துவதை கர்நாடக மாநில அரசு தடைவிதித்துள்ளது. இந்த மணல் மூலம் உருவாகும் கட்டிடத்தில் விரிசல்கள் உருவாகின்றது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றும் இந்த மணல் ஏரிகள், குளம், குட்டைகளில் அதிகம் எடுக்கப்படுகிறது.  இதில் அதிகமான வண்டல், சேற்றுக் கனிமங்கள்  உள்ளது.

இயற்கையை அழிக்கும் தொழில்நுட்பத்தைப் பெரும் அளவில் நாம் இன்று பயன்படுத்துகின்றோம். ஆனால் இயற்கையைக் காக்கும் இந்தத் தொழில்நுட்பம் சிறிய அளவில் உள்ளது. இதனைப் பெரிதுபடுத்தி இயற்கையை காப்பாற்றிட வழிவகுக்க வேண்டும் நாம்.

0 komentar:

Post a Comment