நாம் நினைக்கும்போது நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு குளிப்பது, குளியல் முறைக்கு மாறானது மட்டுமல்ல, அதனால் எந்தப் பயனும் கிடையாது. எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல, எப்படிக் குளிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
நாம் தினந்தோறும் குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். அதிகாலையில் குளிக்க வேண்டும். அதுதான் நல்லது. நதியிலும், நீர் நிலையிலும் குளித்தால் நன்மை உண்டு. நதியும் நீர் நிலையும் இல்லாத நகர வாசிகள் 8'ஜ்3' என்னும் அளவுடைய நீர்த் தொட்டியில் நீரைவிட்டு அதில் குளிக்க வேண்டும்.
சித்திரை வைகாசி மாதங்களில் சூரியன் உதயமாகி (5 நாழிகை) மணிக்குள்
குளிக்க வேண்டும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சூரிய உதயத்துக்குப் பின் (4 நாழிகை) மணிக்குள் குளிக்கவேண்டும். மார்கழி,தைமாதங்களில் (2 நாழிகை) மணிக்குள்ளும் மாசி, பங்குனி மாதங்களில் (3 நாழிகை) மணிக்குள்ளும் குளிக்க வேண்டும். நோயற்ற வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் இவ்வாறு குளித்துவந்தால், உடல் நலம் பெற்று வாழ்வார்கள்.
குளிக்கும்போது, எண்ணெயைப் பாதத்தில் தேய்த்துக் கொண்டு குளித்தால்,
கண்களில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
கண்களில் எண்ணெய் விட்டுக் கொண்டு குளித்தால், காதுகளில் உள்ள
குறைபாடுகள் நீங்கும்.
தலைக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு குளித்தால், உடம்பிலுள்ள அனைத்துக் குற்றங்களும் நீங்கும்.
குளிக்கும்போது, இரண்டு மூன்று மாவிலைக் கொத்துகளை வேகும் அளவுக்குக் காய்ச்சி ஆற வைத்து, அந்த நீரை குளியல் தொட்டியில் ஊற்றி, தண்ணீர் ஊற்றி அதில் அமர்ந்து குளித்தால், உடலுக்குத் தேவையான நன்மைகள் தானே கிடைக்கும். குளிக்கும் போது, தண்ணீரை முதலில் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். தலையில் ஊற்றும் தண்ணீல் உடல் முழுவதும் நனையுமாறு ஊற்றிக் குளிக்க வேண்டும் இது, குளிக்க வேண்டியமுறை.
0 komentar:
Post a Comment