Thursday, 15 May 2014

கோவில்களில் கால் கழுவிய பின் தலை மேல் தண்ணீர் தெளிப்பது ஏன்?

கோவில்களில் கால் கழுவிய பின்  தலை மேல் தண்ணீர் தெளிப்பது நாம் அனைவரும் கடைபிடிக்கும் ஒரு  வழக்கம் ஆகும்.

இந்த வழக்கம் எதனால் வந்தது? அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்வோம்.

வீட்டில் இருந்து கோவில் செல்லும் வழியில் நிறைய நல்ல விஷயங்கள்,கெட்ட விஷயங்களை கடந்து வர நேரிடும்.

நாம் கோவிலுக்குள் நுழையும்போது கை கால்களை சுத்தமாக கழுவிய பின்னர் தலை மேல் சிறிது நீர் தெளிபதினை வழக்கமாக கொண்டுள்ளோம்.

தலை மேல் தண்ணீர் தெளிப்பது, 5 பூதங்கள் ஆகிய நிலம்,நீர்,காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றின் சாட்சியாக நான் வரும் வழியில் எவ்வளவு நல்ல விஷயங்கள்,கெட்ட விஷயங்களை கடந்து வந்திருந்தாலும் என் மனதில் நல்லவகைளை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளேன், உன்னையே மனம் உருகி சரன் அடைகிறேன் என்று பொருளாகும்.

0 komentar:

Post a Comment