Tuesday, 20 May 2014

திருமணங்களில் ஏன் அட்சதையாக அரிசி தூவுகிறார்கள்?














மங்கல நிகழ்வுகளில் அட்சதை தூவி வாழ்த்தும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து தொன்றுதொட்டு காணப்படுகின்றது.
அட்சதை என்றால் உடைக்கப்படாத, பழுதுபடாததுமான (நுனி முறியாத) அரிசி, மஞ்சள் பொடி, மலர்கள் சேர்த்த கலவை ஆகும். அட்சதை என்ற வடமொழிச் சொல்லை "அறுகரிசி" எனவும் அழைக்கின்றனர்.
கன்னிகா தானம், தாலிகட்டுதல், ஆசீர்வாதம் ஆகிய முக்கிய நிகழ்வுகளின் போது அட்சதை இட்டு வாழ்த்தும் வழக்கம் நம்மவர்களிடையே உள்ளது. எனினும், ஆசீர்வாதத்தின் போதே பலரும் அட்சதை தூவி வாழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். முழுமைத்துவத்தின் குறியீடாக அட்சதை அமைகின்றது. அரிசியில் உள்ள முனை சந்ததி விருத்தியைக் குறிக்கின்றது. முழுப் பச்சை அரிசி செழிப்பிற்கான குறியீடு ஆகும். மஞ்சள் மங்கலத்தின் வெளிப்பாடு.
அறுகு வம்ச விருத்தியின் குறியீடு. ஆனால், தற்காலத்தில் அழகுக்கு முதன்மை வழங்க வேண்டும் என்பதற்காக வெள்ளை அரிசிக்கு மஞ்சள் நிறச்சாயம் பூசி அட்சதையாக பயன்படுத்துகின்றனர்.
அட்சதை என்பது ஒரு மங்கலப்பொருள்.அது எவர் கையிலிருந்து அளிக்கப்படுகிறதோ அதைபொருத்து அதன் சக்தி இருக்கும்.
பெற்றோர்கள், பெரியவர்கள், தூய்மையான எண்ணம் உடையவர்கள் கையிலிருந்து ஆசீர்வாதம் செய்து தூவப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தது.
அவைகள் நல்ல பலன்களை தவறாது அளிக்கும்.

0 komentar:

Post a Comment