இன்றைய இளைய சமுதாயத்தினர் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பல நல்ல
பழக்கவழக்கங்களை ஏற்றுகொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இது போன்ற
பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்ள கூட விரும்புவதில்லை. சரி நம் முன்னோர்கள்
கடைப்பிடித்த சில நல்ல பழக்கவழக்கங்களை பார்ப்போம்.
வயிறு பசித்தால் மட்டுமே உணவினை உண்ண வேண்டும், பிறரின் கட்டாயத்திற்காக உணவினை உண்ணக்கூடாது.
உணவினை வியாதிக்கு மருந்து உண்ணுவது போல உண்ணவேண்டும். ருசிக்காக உண்ணக்கூடாது. அது உடல் நலனை பாதிக்கும். உண்ணும் போது மகிழ்வுடன் உண்ண வேண்டும்.
குழந்தைகளுக்கு முன் எதையும் அவர்களுக்கு தராமல் உண்ணக்கூடாது.
அதிலும் புகைத்தல், மது அருந்துதல் நிச்சயம் கூடாது.
உணவினை நிந்திக்க கூடாது , உணவினை வீணாக எறிதல் கூடாது .
அன்னதானம் செய்பவர்களை எந்த காரணம் கொண்டும் இழிவாகப் பேசக்கூடாது.
உணவு உண்ணும் போது படுத்துக்கொள்ளக் கூடாது, கால்களை நீட்டிக்கொண்டு உண்ணக்கூடாது. முதியவர்களை தவிர மற்றவர்கள் தரையில் அமர்ந்துதான் உண்ண வேண்டும்.
கர்ப்பமாக உள்ள பெண்கள் சூரியன் மறையும் நேரத்தில் உணவு உண்ணக்கூடாது. ஆடையில்லாமல் வெற்று உடலுடன் குளித்தல் கூடாது. மாலை நேரத்தில் உறங்குதல் கூடாது.
கர்ப்பமான பெண்கள் மன அமைதித்தரும் பாடல்கள் மற்றும் அன்பு
பாசம்,தைரியம் வளர்க்கும் கதைகள் கேட்பது,படிப்பது போன்றவற்றில்
இடுபாடுக்காட்டவேண்டும்.
தாய்,தந்தை, குரு மற்றும் வயது முதிர்ந்த பெரியவர்களின் சாபத்திற்கு
ஆளாகக்கூடாது.
0 komentar:
Post a Comment