Monday, 19 May 2014

வீட்டு வேலை செய்யுங்கப்பா....உடல் ஆரோக்கியமா இருக்குமாம்!

இன்றைய காலத்தில் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதற்காக வீட்டை சுத்தம் செய்ய கடைகளில் விற்கும் வாஷிங் மிசின், கிரைண்டர், வேக்கியூம் கிளீனர் போன்ற பொருட்களை வாங்கி சுத்தம் செய்கின்றனர். அவ்வாறு வீட்டை சுத்தம் செய்ய சோம்பேறித்தனப்பட்டால், உடல் வளையாமல் இருந்து, அதனால் ஆரோக்கியத்திற்கு தடை ஏற்படும். ஏனெனில் வீட்டை சுத்தம் செய்வதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அது எப்படியென்று பார்ப்போமா?

குனிந்து நிமிர்ந்து வீட்டை சுத்தம் செய்வதால், உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் கரையும். அதுவும் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து அமையுமாம் .
 
மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் வீட்டை சுத்தம் செய்வதால் சரியாகும். எப்படியென்றால், வீட்டை சுத்தம் செய்யும் போது மனம் அந்த வேலையில் கவனத்தை செலுத்துவதால், மனதில் இருக்கும் கவலைகள் மற்றும் கஷ்டங்கள் பறந்துவிடும். 
 
 உடற்பயிற்சியிலேயே சிறந்த பயிற்சி என்றால் அது வீட்டை சுத்தம் செய்வது தான். இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்படுவதோடு, கை கால்கள் நன்கு வளைந்து, தசைகள் நன்கு வலுவாகின்றன. அதிலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வீட்டு வேலையை செய்தால், எலும்புகள் வலுபெற்று பிரசவத்தின் போது, எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். 
 
துணியை துவைக்க வாஷிங் மிசினை பயன்படுத்தாமல், கைகளினாலேயே துவைத்தால், கைகள் வலுபெறுவதுடன், இடுப்பு எலும்புகளும் நன்கு வலுவோடு இருக்கும். 
 
எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் போது, சிறிது நேரம் வீட்டு வேலையை செய்தால் கவனச்சிதறல்கள் நீங்கும். சுத்தம் செய்யும் போது வேறு எந்த நினைப்பும் இருக்காது, சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். 

அதுனால ,  டைம் இருக்கறப்ப வீட்ட சுத்தம் செயுங்க , மனசும் சுத்தம் ஆகும் .

0 komentar:

Post a Comment