Thursday, 15 May 2014

நோபெல் பரிசு எப்படி வந்தது

உலக புகழ் பெற்ற ஆல்ப்ரெட் நோபெல் மிக சிறந்த விஞ்ஞானி ஆவர்.

அவர் கண்டுபிடிப்புகளுள் ஒன்று அவரை மிகவும் மனவருத்தம் கொள்ள செய்தது.

அத்தகைய கண்டுபிடிப்பான "டயனமைட்" என்னும் வெடி பொருளினை அவர் பாறைகள், மிகபெரும் மலைகளை  தகர்பதிற்காக  மக்கள் சக்தி பயன்படுவதை குறைக்க எண்ணி தனது விடா முயற்சியால் கண்டுபிடித்தார்.

பின்னாளில் அது போர் காலங்களில் மக்களை கொள்ள பயன்படும் பொருளாக மாறியது.

ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் "நோபெல் ஒரு மரண விஞ்ஞானி" என குறிப்பிட்டு தனது பதிப்பினை வெளியிட்டிருந்தது.

இந்த செய்தியினை கண்ட நோபெல் மிகவும் வருதமுற்று தனது மேல்
வந்த பலியை துடைக்க எண்ணினார்.

அதன்படி, தனது கண்டுபிடிப்புகளால் வந்த பணத்தினை எல்லாம் சிறந்த
விஞ்ஞானிகள், அறிஞர்களுக்கு தர எண்ணி நோபெல் பரிசினை அறிமுகபடுத்தினார்.

இவ்வதமே நோபெல் பரிசு பிறந்தது.



0 komentar:

Post a Comment